Breaking News LIVE: ஆருத்ரா நிறுவனத்தில் ரூ. 3.41 கோடி பறிமுதல்..!
Breaking News LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
2 ஆண்டுகளுக்கு சமையல் எண்ணெய்க்கான சுங்கவரியை ரத்து செய்துள்ளது மத்திய அரசு
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகியுள்ளது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகியுள்ளது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன், 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக இருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்துவைத்தார். ஜீன் மாதம் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பது இது 11 முறை ஆகும். இன்னும் மூன்று நாட்களில் மேட்டூர் அணையில் நீர் கல்லணையை அடையும்.

வேலூர் காட்பாடி அருகேயுள்ள அடகுக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் திருட்டு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் தகுதிசுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
உலகில் 52.80 கோடி பேருக்கு கொரோனா; 63.01 லட்சம் பேர் உயிரிழப்பு; 49.82 கோடி பேர் குணமடைந்தனர்.
குறுவை சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையை இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னையில் இரண்டாவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Background
கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்று முன் தினம் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த புதிய விலையின் அடிப்படையிலே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் சென்னையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக நேற்று இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது.
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -