Breaking News LIVE: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல்

Breaking News LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 23 May 2022 05:34 PM
சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி. 

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு காவல் நீட்டிப்பு

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை மேலும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி 

விருதுநகர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு எதிரான  குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

வரும் 28 ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு.

இலங்கையில் புதிதாக பதவியேற்கும் 8 அமைச்சர்களின் துறை விவரம்!

இலங்கை அமைச்சரவையில் இடம்பெறும் எட்டு அமைச்சர்கள் விவரம்;


மஹிந்த அமரவீர-விவசாயம் மற்றும் வனவிலங்கு துறை


பந்து குணவர்தந் ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை 


கெஹலிய ரம்புகவெல- நீர்பாசனம் மற்றும் நீர்வழங்கல்


டக்ளஸ் தேவானந்தா - கடற்தொழில் 


ரமேஷ் பத்திரண- தொழில்துறை


விதுர விகரமநாயக்க-புத்த சாசனம், சமயம் மற்றும் கலாச்சார விவகாரம்


நஷீர் அஹமத்-சுற்றாடல் துறை


அநுருத்த ரணசிங்க- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

இலங்கையில் மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி பிரச்சினை நிலையில், புதிய பிரதமராக ரணி விக்ரமசிங்க இம்மாதம் 12 ஆம் தேதி பதவியேற்றார். ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், மேலும், 8 அமைச்சர்கள் புதிதாக இன்று பதவி ஏற்கின்றனர்.

Background

ஜப்பான் நாட்டில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார். ஜப்பான் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது ரஷ்யா- உக்ரைன் போர் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.