Breaking LIVE: காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா தொடக்கம்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பிற முக்கிய விஷயங்களை பற்றி கலந்துரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பிற முக்கிய விஷயங்களை பற்றி கலந்துரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் அருகே கனமழையால் ஏறபட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் என்ணிக்கை 13-ஆக உயர்வு.
மிழகத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.
இராமநாதபுரம், திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்டங்களீல் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
கோவை அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவு மற்றும் பங்களாதேஷின் விடுதலையைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 16 அன்று விஜய் திவாஸ் அல்லது வெற்றி நாள் நினைவுகூரப்படுகிறது.
விஜய் திவாஸ் விழாவில், கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி கலிதா, சீன மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அத்துமீற முயற்சித்த போதிலும், இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள எல்லைப் பகுதிகளில் நிலைமை " கட்டுப்பாட்டில் உள்ளது" என்று வலியுறுத்தினார். லெப்டினன்ட் ஜெனரல் கலிதா, ராணுவ வீரர்களின் தியாகமும் வீரமும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறது என்று வலியுறுத்தினார்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 20ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து தரும் மசோதா நிறைவேறியது வரவேற்கத்தக்கது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விளைவாக மசோதா மக்களவையில் நிறைவேறியது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.110 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. திருப்பூர், ஓசூர், அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல்,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகிறது.
தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.110 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. திருப்பூர், ஓசூர், அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல்,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகிறது.
தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.110 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. திருப்பூர், ஓசூர், அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல்,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகாதீபம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் எரிந்த மகாதீபம் இன்றுடன் நிறைவடைவதால் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று சிறப்பு வழிபாடு
மழை நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.450 கன அடியில் இருந்து 611 கன அடியாக குறைந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 760 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
இன்ஸ்டாகிராமில் ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்க சிறப்பு வசதி அறிமுகம் - Instagram.com/hacked என்ற வலைதாள முகவரி மூலம் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுக்கலாம் என அறிவிப்பு
Background
இன்றைய நாளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பர் 16 ஆம் தேதியான இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சியானது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் (16.12.2022) : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -