Breaking News LIVE : குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு ஒத்திவைப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 5 பேருக்கு 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலைத்தேர்வு முடிவு பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தலை நேர்மையாக நடத்துக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இடைத்தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாத சக்கரவர்த்தி அமர்வு வழக்கை நாளை விசாரிக்கிறது.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் உயிரிழந்த 4 மாணவிகளின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து தெரிவித்து வருகின்றனர். அனுமதி பெறாமல் மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததாக பெற்றோர்கள் புகார் அளித்தாக கூறப்படுகிறது.
கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குளித்தலை மாயனூர் கதவணையை சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் 4 பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். பள்ளி மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார்கள் அளிக்கபபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18 மற்றும் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்படும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு காலை 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இந்நிலையில் மதுரையில் டிரோன்கள் பறக்கத்தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நியூசிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்தே புயல் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
மேகாலாய தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேரை காவல் துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது மூன்று பேரை கூடுதலாக கைது செய்துள்ளனர். எனவே கைது எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனி வட்டாச்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதிக கட்டணங்கள் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
நாக்பூரில் இருந்து மும்பைக்கு 90 கண்டெயினர்களுடன் சென்ற ரயில் மாயமானதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் நெருங்கியுள்ளனர்.
ஆனால், ஹரியானாவில் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் விளக்கம்.
திருவாண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 6 பேரை ஹரியானாவில் வைத்து தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வந்த தகவல் தவறு என எஸ்.பி. கார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் இந்தியாவில் இடமில்லையா என சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி விமர்சனங்கள் வைப்பதை அச்சுறுத்தும் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிபிசி மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை குறித்து சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் காரில் வந்த 5 பேரை மடக்கி போலீஸ் கைது செய்தது. காரின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிப்ரவரி 20ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார். இடைத்தேர்தலில் அவர் இன்னும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CUET நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா - நேபாளம் இடையே சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி இன்று சென்னை நேரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 270வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 270வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -