Breaking News LIVE: ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 Feb 2023 08:16 PM
5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

ஈரோடு கிழக்கில் 77 வேட்பாளர்கள் களமிறங்குவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

Breaking News LIVE: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஜினி பாட்டில் பணி இடைநீக்கம்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஜினி பாட்டில் அவை விதிமுறைகளை மீறியதற்காக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் ஜெஜதீப் தங்கர் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE: விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு - ஒப்பந்தம் கையெழுத்து!

விசைத்தறி தொழிலாளர்களை 12 வாரங்களில் மனுதாரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை

கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை..!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணைக்கு உயர்நீதிம்னறம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர்- எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Breaking News LIVE: அதானி குழும் விவகாரம் - செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதானி குழும விவகாரம் குறித்து ஹிண்டன்பர்க் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் ஹிண்டன்பர்க் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு வரும் திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க செபி அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Breaking News LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு!

இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு - இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் தேர்தல் அலுவலர் அறிவிப்பு.


காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம், தே.மு.தி.க. வேட்பாளர் ஆன்ந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்

Breaking News LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு திரும்பபெறும் நேரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 77 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பபெறும் நேரம் இன்றுடன் நிறைவடைந்தது.

Breaking News LIVE: மதுரையில் 15 நாள்களுக்கி ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை

மதுரையில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை பொது, தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள், ஆயுதம் ஏந்தியபடி ஊர்வலம், பயிற்சி, நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பேரணியை அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக-வுடனான கூட்டணி தொடரும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக-வுடனான கூட்டணி தொடரும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்தியாவிற்கு 2024ல் விடியல் வரும் தயாராக இருக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை கொரட்டூரில் பரிதி இளம்சுருதி திருமண விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் 2024ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விடியல் வரும் அதற்கு தயாராக இருங்கள் என்றார்.


மேலும் பேசுகையில், பேனா சின்னம் குறித்த விமர்சனத்திற்கு விளக்கமளிக்கும் விதத்தில், குடிசையை மாற்றி அடுக்குமாடி அமைத்து தந்தது கலைஞரின் பேனா தான், தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது அந்த பேனா தான் என தெரிவித்தார்.

81 கோடியில் பேனா சிலை வைப்பதற்கு மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனா வாங்கிக் கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு பேனா வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தரையில் வைக்கலாம். கடலில் கொண்டுபோய் வைத்தால்தான் பேனா வைத்தது மாதிரி இருக்குமா ? 


81 கோடியில் பேனா சிலை வைப்பதற்கு மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனா வாங்கிக் கொடுக்கலாம்

Perambur Jewellery Theft : பெரம்பூர் பேப்பர் மில் சாலை நகைக்கடையில் 9 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளை

Perambur Jewellery Theft : பெரம்பூர் பேப்பர் மில் சாலை நகைக்கடையில் 9 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளை 

இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய நிலைவரவிருக்கிறது. அதற்கு தயாராக இருங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

2021ல் தமிழ்நாட்டிற்கு எப்படி ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ. அதே மாதிரி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய நிலைவரவிருக்கிறது. அதற்கு தயாராக இருங்கள்..!


- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Breaking News LIVE: பள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் பலி

ராமநாதபுரம் அருகே உள்ள கமுதியில் பள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் பலியான நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி 

Breaking News LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக பணிமனை பேனர் 4வது முறையாக மாற்றம்

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பணிமனை பேனர் 4வது முறையாக மாற்றம் - 3 முறை வைக்கப்பட்ட பேனர்களிடன் இடம் பெறாத பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. 

இஸ்ரோ: எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்தது.

இன்று காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் மூன்று செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வழக்கு இன்று விசாரணை..

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு குறித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

2 வந்தே பார்த் ரயில்கள் இன்று தொடக்கம்.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார். சாந்தாகுரூஸ்- செம்பூர் இணைப்புச் சாலை, குரார் சுரங்கப்பாதை திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு ரத்து..

சென்னை காரைக்குடி இடையே செல்லும் பல்லன் விரைவு ரயில் பிப். 16,17,20, 21,23, 24,27,28, மற்றும் மார்ச் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. 


மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் பல்லவன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தலில் மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்..

வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் 83 வேட்பாளர்களின் வேட்பமனு ஏற்கப்பட்டுள்ளது. மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால் மாலை 3 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் வாபஸ் பெறலாம். 

நாமக்கல்: சாலை கவிழ்ந்த லாரி 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு

நாமக்கல்: குமாரப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான எத்தனால் ஏற்றிச் சென்ற லாரி 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

வாணியம்பாடி அருகே நெக்குந்தி கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது..

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நெக்குந்தி கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது. 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துக்கொண்டுள்ள நிலையில், ஏராளமானோர் பார்த்து ரசிக்கின்றனர். 

இன்று காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இன்று காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 மூன்று செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Breaking News LIVE: காஷ்மீரில் 60 லட்சம் டன் லித்தியம் படிவங்கள் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால் ஹைமானா 60 லட்சம் டன் லித்தியம் படிவங்கள் பூமிக்கடியில் இருப்பது கண்டுபிடிப்பு - நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் 

Breaking News LIVE: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 4 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜெயபுரா நகருக்கு அருகே தென்மேற்கு கடலுக்கு அடியில் 22 கி.மீ ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவு - கடற்கரை அருகே இருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி , மீட்பு பணிகள் தீவிரம் 

Background

அந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட் இன்று காலை 09.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 3 செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது. அந்த ராக்கெட் 15 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைகோள்களையும் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 


3 செயற்கைக்கோள்கள்:


எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட்டில்  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இ.ஓ.எஸ்-07', சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் 'ஜேனஸ்-1', ஆகிய 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் 'ஆஸாதிசாட்-2' எனும்  8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் பயிலும்  750 மாணவிகள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.






எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்:


இஸ்ரோ சார்பாக இதுவரை அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. தற்போது,  வளரும் நாடுகள்,  பல்கலைக்கழகங்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.  500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.


முதல் முயற்சி தோல்வி:


எஸ்எஸ்எல்வி டி1 ரக ராக்கெட்டை வடிவமைத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் அதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் போது சென்சார் செயலிழப்பின் காரணமாக செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.