தமிழ்நாடு:



  • எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பீகார் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - சமூக நீதியின் பூமியில் இருந்து போர் முழக்கம் எழுவதில் ஆச்சரியமில்லை என டிவீட்

  • கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு நிபந்தனைகள் உடன் அனுமதி - விரைவில் பணிகள் தொடங்கும் என தகவல்

  • தொழில் நிறுவனங்கள் பணி அமர்த்தப்படுவதற்கான போதிய திறன் பட்டதாரிகளிடையே இல்லை - ஆளுநர் ரவியின் பேச்சால் சர்ச்சை

  • செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

  • பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை  முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தல்

  • நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் இருந்து நா ரெடி பாடல் வெளியீடு - 10 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று அசத்தல்

  • சென்னையில் பயணிகள் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து - பயணிகள் அலறி அடித்து ஓடியதால் பதற்றம்

  • முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் மரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

  • அண்ணன் வாங்கிய கடனுக்காக கத்தி முனையில் தம்பியை கடத்திய கும்பல் - சென்னையில் கடத்தப்பட்ட இசைக்கலைஞர் புதுக்கோட்டையில் போலீசாரால் மீட்பு


இந்தியா:



  • வேறுபாடுகளை களைந்து நாட்டிற்காக ஒன்றிணைகிறோம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

  • பீகார் மாநிலம் பாட்னாவில் கூடுகிறது எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட மாநாடு - ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு

  • எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு அழைப்பு இல்லை - காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடும் மாயாவதி

  • அசாமில் தொடர் மழை - கடும் வெள்ளத்தால் 1.25 லட்சம் பேர் பாதிப்பு - 780 கிராமங்கள் தத்தளிப்பு

  • தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு - அதிகாரிகள் தகவல்

  • எச்-1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் - இந்திய மாணவர்கள், அலுவலர்களுக்கு வந்த புதிய தகவல்

  • மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரின் மகள் ஆணாக மாறாக விருப்பம் - இது என் வாழ்க்கை தொடர்புடையது என விளக்கம்


உலகம்:



  • அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த சூறாவளி - 4 பேர் பலி

  • கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நிர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

  • எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால் - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து

  • அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம்

  • நேருக்கு நேர் மோதல் சண்டைக்கு அழைத்த எலான்ம் மஸ்க் - நான் தயார் என சொன்ன மெட்டா குழும தலைவர் எலான் மஸ்க்


விளையாட்டு:



  • உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி - நேபாளத்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

  • டிஎன்பிஎல் - சேலம் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி

  • மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு, ஆசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு