Breaking News LIVE: தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
குடும்ப அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் - பிரதமர் மோடி
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 4,815க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 70.80க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 70,800க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருக்கும் நிலையில், வெள்ளி விலையும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராஜ வேண்டுமென அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்..
மூலப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் லைட்டர்களைத் தடுக்கவும் கோரிக்கை.
இந்தியாவில் ஒரே நாளில் 1,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
சபரிமலையில் 1,15,000 ரூபாயாக இருந்த பூஜைக் கட்டணம் 1,37,000 ரூபாயாக கட்டணம் உயர்வு. உதயாஸ்தமான பூஜை கட்டணம் 50,000 ரூபாயில் இருந்து 61,800 ரூபாயாக உயர்வு. தங்க அங்கி சார்த்தலுக்கான கட்டணம் 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக அதிகரிப்பு. புஷ்பாபிஷேகம், சதகலசம் பூஜைக்கான கட்டணம் 12,500 ரூபாயாக உயர்வு. உற்சவ பூஜை கட்டணம் 30,000 ரூபாயில் இருந்து 37,500 ரூபாயாக உயர்வு. அரவணை 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், 1 அப்பம் 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்வு.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலையை அதிபர் வாபஸ் பெற்றார். இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. துறை ரீதியிலான மானிய கோரிக்கை இன்று முதல் விவாதிக்கப்படுகிறது.
Background
தமிழகத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக, மும்பையில் ஒமிக்ரான் XE என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -