Breaking News LIVE: ’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு முஸ்லீம் லீக் கோரிக்கை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
ABP NADULast Updated: 05 Apr 2022 06:41 PM
Background
இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல் மற்றும்...More
இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் அரசியல் குழுப்பம் நீடித்து வரும் நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஏதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநில கல்விக் கொள்கைக்கு குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
மத்திய அரசு பரிந்துரைத்ததுதான்.. சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சர் கே.என் நேரு விளக்கம்..
மத்திய அரசு பரிந்துரைத்ததுதான்.. சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சர் கே.என் நேரு விளக்கம்.. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் இது செயல்படுத்தப்படும் என அமைச்சர் நேரு மேலும் விளக்கம்
வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், இலவச திட்டங்களை தவிர்க்கலாம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் ரயில் கஞ்சா கடத்திய கணவன், மனைவி மற்றும் மனைவியின் தம்பி உட்பட மூவர் கைது!
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இன்று காலை 5 மணிக்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்து இறங்கிய மூன்று பேரிடம் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் 23 பண்டல்களில் மறைத்து எடுத்து வந்த ரூ 9.20 லட்சம் மதிப்புள்ள 46 கிலோ கஞ்சா பறிமுதல்.
கடத்தலில் ஈடுபட்ட திருச்சி தரங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் (25), சத்யா (20), சரபேஸ்வரன் (19) கணவன், மனைவி, மனைவியின் தம்பி உட்பட மூன்று பேர் கைது.
2022 - 2023க்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதமும் 9ம் தேதியே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் தரப்படுகிறது.
கடந்த 15 நாட்களில் 13வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை... இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.