Breaking News LIVE: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு - மின் உற்பத்தி நிறுத்தம்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். 1, 2, 5 ஆகிய யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ’டிஜி யாத்ரா’ முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணிக்க முக அங்கீகார அமைப்பு அறிமுகமாகிறது. முதற்கட்டமாக கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, புனே, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023க்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை பரிந்துரை செய்து அதிபர் ஆரிப் அல்விக்கு இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்துக்கட்சிகள் அடங்கிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சிகள் அடங்கிய அமைச்சரவையில் இணைய இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சீமைக்கருவை மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை அறிவிக்க இரண்டு மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கி உள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக திமுக எம்பிக்கள் கண்டனம்
மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு.. ஆளுநரை திரும்பப்பெறக்கோரி முழக்கம்..
ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்
10,11,12 வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோட்டூர்புரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ. 4,803க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 176 குறைந்து ரூ.38,424க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 71.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 71,400க்கு விற்கப்படுகிறது.
715 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் 1000-க்கும் குறைவாக பதிவானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..
இந்தியாவில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற கோரி மக்களவையில் திமுக எம்பி டிஆர்பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் இன்று உதயமாகிறது.
இந்திய ராணுவப் படை தளபதி 3 நாட்கள் பயணமாக இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் +2 கணித தேர்வு வினாத்தாள் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்
இலங்கையில் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
Background
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்து 109.34 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -