Breaking News LIVE: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
திமுக அரசு பொறுப்பேற்றபின் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். திமுக அரசின் செயல்பாடுகள் மாநில வளர்ச்சி, இளைஞர்கள் எதிர்காலத்திற்கு துணைநிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணையக்குழு கூறியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உறுதிப்படுத்தப்படாமல் அவசர நிலை அமலாகியுள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டு உள்ளது: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரிப்பை பிரதமராக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தர்ராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு சென்றபோது மர்மநபர்கள் வெட்டிச்சென்றனர்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குகிறது.
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13, 146 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என்றும், இறுதித் தேர்வுகள் இல்லை என்பது பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் ஆளுநர் அதிரடியாக நீக்கப்பட்டது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு புதிய ஆளுநர் தேர்வு செய்யும் பணி தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு அதிர்வு ஏற்பட்டுள்ளது. சரியாக திருப்பதியில் இருந்து 85 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் அதிகாலை 1.10 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருநாளில் 1, 096 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் போன்ற சேவைகள் முடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் போர்வெல் அமைப்பதற்கான கட்டணம் 20% வரை உயர்வு : போர்வெல் லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
Background
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து 108.96 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -