Breaking News LIVE: பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் இம்ரான் கான் திட்டவட்டம் !

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 Mar 2022 09:27 PM
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் - இம்ரான் கான் திட்டவட்டம்

பாகிஸ்தான் நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை - நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் -  முதல்வர் 

டெல்லி பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன் -  முதல்வர் ஸ்டாலின் 

டெல்லி முதல்வருடன் இணைந்து மருத்துவமனை, பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன் -  முதல்வர் ஸ்டாலின் 

பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் -  முதல்வர் ஸ்டாலின்

கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை எடுப்பதால பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் -  முதல்வர் ஸ்டாலின்

நீட் பிரச்னையை அழுத்தமாக பதிவு செய்தேன் - முதல்வர் ஸ்டாலின் 

நீட் பிரச்னையை பிரதமர் மோடியிடம் அழுத்தமாக பதிவு செய்தேன் - முதல்வர் ஸ்டாலின் 

14 கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினேன் - முதல்வர் ஸ்டாலின்

உடனடியாக நேரம் ஒதுக்கி என்னை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி.14 கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ம் தேதி முதல் மாஸ்க் அணியத் தேவையில்லை

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ம் தேதி முதல் மாஸ்க் அணியத் தேவையில்லை  என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை - உண்மை கண்டறியும் குழு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு  அமைத்தது தமிழக அரசு

கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை - உண்மை கண்டறியும் குழு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு  அமைத்தது தமிழக அரசு

டெல்லி முதல்வரை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி முதலமைச்சரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை அம்மாநில முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்.

ராஜ்நாத் சிங்குடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி பயண மர்மத்தை முதலமைச்சர் விளக்குவாரா..? - இபிஎஸ்

டெல்லி பயணத்தின் மர்மத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்குவாரா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சிக்கல்களில் இருந்து காப்பாற்ற கோரி பிரதமரை முதல்வர் சந்தித்ததாக பொதுமக்கள் பேசுகிறார்கள் எனவும் கூறினார்.

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.  இந்த சந்திப்பிற்கு முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை சந்தித்தார்.

சோனியாகாந்தியை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

100 நாள் வேலைத்திட்டம் - ரூ. 949 கோடி நிதி ஒதுக்கீடு

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியில் 75%ஐ மத்திய அரசும் 25% நிதியை மாநில அரசும் வழங்குகின்றன.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவு ரத்து!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணத்தை அமலாக்கத்துறைக்கு தரமறுத்த சிறப்பு கோர்ட் அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த பின் நகல் வழங்ககோரி சிறப்பு கோர்டில் அமலாக்க பிரிவு மனுதாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைப்பு

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்துவரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ. 14 லட்சத்தை செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

பதவிகாலம் முடியும் 72 எம்பிக்களுக்கு பிரதமர் வாழ்த்து

பதவிகாலம் முடியும் 72 மாநிலங்களவை எம்பிக்களை அவையில் வாழ்த்தி பேசினார் பிரதமர் மோடி.

வன்னியர் சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு கொடுத்த 10.5% இட ஒதுக்கீடு செல்லாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கல்லூரி மாணவி தற்கொலை : தாளாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு

நாகை அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாளாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு

குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி 65 சவரன் நகை கொள்ளை

நாகை : வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி 65 சவரன் நகை கொள்ளை 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,225 ஆக குறைவு!

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,225 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி!

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

கொரோனாவுக்கு 28 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 28 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் ரூ.100 யை கடந்த பெட்ரோல் விலை!

புதுச்சேரி மாநிலத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 யை கடந்து இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

புதுச்சேரி : மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு ஏப்ரல் 2ஆம் தேதி தொடக்கம்!

புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கான இறுதி கட்ட செண்டாக் கலந்தாய்வு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறது. 

இலங்கையில் இன்று முதல் 13 மணிநேர மின்வெட்டு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வரலாறு காணாத வகையில் நாளொன்றுக்கு 13 மணிநேர மின்வெட்டு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. 

மத்திய அமைச்சர்களை சந்திக்க முதலமைச்சர் முக ஸ்டாலின்..?

பிரதமர் மோடியை சந்திந்தபிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க இருக்கிறார். 

பிரதமரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்!

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று பிற்பகல் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்திக்கிறார். 

புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்தாக புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

பான் - ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்!

ஆதார் கார்டையும், பான்கார்டையும் இணைக்க (மார்ச்-31-ஆம் தேதி) இன்றே கடைசி நாளாகும்.

நாடு முழுவதும் ஜூலை 17-ந் தேதி நீட் நுழைவுத்தேர்வு

மருத்துவ படிப்புகளுக்காக மத்திய அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Background

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.66க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்றும் 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 107.45க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு ரூபாய் 97.52க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 97.52க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 9வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.