Breaking News LIVE: தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது
தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன.ர்
நாஞ்சில் சம்பத், தமிழிசை செளந்தரராஜனை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, சாமானியர்கள் கூட பிரதமராகும் வாய்ப்பு பாஜகவில் உள்ளது என்பதையும் தெரிவித்தார்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளா, தமிழகத்தில் விற்பனை குறைந்ததை அடுத்து விலை குறைக்கப்பட்டுள்ளாதாக கோழி பண்ணையாளர்கள் கூறினர்.
ஆதிதிராவிட நல அலுவலர் சரவணகுமார் என்பவரின் காரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31%-ஆக தற்போது இருக்கும் நிலையில் 34%-ஆக உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - கேபினட் ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என்றும், இதனால் தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா பெண்கள் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கும் மானியக்கோரிக்கை மீதான விவாதம் வரும் மே 10-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தண்ணீரிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுத்து எரிப்பொருளாக பயன்படுத்தப்படும் காரில் நிதின் கட்கரி பயணம் செய்துள்ளார்.
ஆறுமுசாமி ஆணையத்தில் செயலாளர் சிவசங்கரன் விடுப்பில் சென்றதால் புதிய செயலாளராக சஷ்டிபாபு சதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்த ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 இளம்பெண்களை மீட்டனர்.
கொரோனாவால் காணொளி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நேரடி விசாரணை நடைபெற்று வந்தநிலையில், வரும் ஏப்ரல் 4 ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் முழு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இலங்கையில் இன்று முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட இருக்கிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சுழற்சி முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேப்பர், அச்சு மை, பசை உள்ளிட்ட மூலப் பொருள்கள் விலை ஏற்றம் காரணமாக மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் ஒரேநாளில் 1, 233 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது.
ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் எவை? எவை? என்று கீழே காணலாம்.
தாம்பரம் / பள்ளிக்கரணை : 200 அடி ரேடியல் சாலை, அக்ஷயா ப்ளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர், வ.உ.சி. தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.
அடையார் / ஐ.ஐ.டி. : கேனல் பேங்க் சாலை, கே.பி. நகர். 1, 2. 3வது பிரதான சாலை, கே.பி. நகர் 2வது மற்றும் 3வது குறுக்குத்தெரு, பி.வி.நகர் 1 மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலகிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு MQM கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஃபின்டெக் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
டிஎன்பிஎஸ்.சி குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது.இந்தத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்.சி தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலா - சசிகலா தரப்பு வழக்கறிஞர்களுடன் இன்று ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. அனைத்து சாட்சிகளை விசாரித்து விட்டதாக அறிவித்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
உலகளவில் இதுவரை 48.49 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 61.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 41. 89 கோடி பேரும் குணமடைந்துள்ளனர்.
புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 18 நாட்கள் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற உள்ளது.
Background
சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை இன்று 75 காசுகள் அதிகரித்து ரூபாய் 106.69 க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 96. 76 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 5.29 ரூபாயும், டீசலின் விலை 5.33 ரூபாயும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -