Breaking News LIVE: சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 02 Apr 2022 09:07 PM
சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..

சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..

நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..

நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..

திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

 திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

ஜவ்வாது மலையில் விபத்து - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

மக்கள் போராட்ட அறிவிப்பு - இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இலங்கையில் அரசுக்கு எதிராக  நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்தநிலையில் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் ஜவ்வாதுமலை புதூர் நாடு அருகே சேம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். ஜவ்வாதுமலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது

10.5% இட ஒதுக்கீடு ரத்து - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்துக்கு திமுக அரசு சரியாக வாதம் செய்யாததே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். அதிமுக அரசு கொண்டு வந்தது என்பதற்காகவே இடஒதுக்கீட்டை ரத்து செய்ய திமுக அரசு திட்டமிட்டதாகவும் கூறினார்.

திருவொற்றியூரில் திடீரென மயங்கி விழுந்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெயிலின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.  அவரது உடல்நிலை குறித்து இன்னும் சில நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே ராஜினாமா!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். 

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 4, 820 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு  40 குறைந்து ரூ.38, 560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

புதுச்சேரியில் இறுதிக்கட்ட MBBS கலந்தாய்வு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த இறுதிக்கட்ட MBBS கலந்தாய்வு வருகிற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. 

CUET நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் UG, PGயில் சேர CUET நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது. 

கோவை : நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை. தனியார் பயிற்சி மையத்தில் 5 மாதமாக தங்கி நீட்தேர்வுக்கு பயிற்சி எடுத்துவந்த நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்!

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவங்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்த மாணவ சேர்க்கை 50 சதவீதத்திற்கும் கீழே உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என AICTE தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 83 பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 83 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 13, 445 பேருக்கு கொரோனா சிகிச்சை

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை13, 445 ஆக குறைந்துள்ளது. 

புதுக்கோட்டைக்கு வருகின்ற 11ம் தேதி உள்ளூர் விடுமுறை!

முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. 

இலங்கையில் அவரச நிலை பிரகடனம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவின்பேரில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு!

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 108.21 ரூபாய்க்கும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 98.21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உக்ரைனுக்கு மேலும் ரூ. 2,278 கோடி நிதியுதவி

பாதுகாப்பு உதவியாக உக்ரைனுக்கு மேலும் ரூ. 2,278 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

Background

ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்து பதவி விலகினார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தநிலையில், academy of motion picture arats and science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்தார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.