Breaking News LIVE: போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்..

இந்த செய்தி தொகுப்பில் இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 29 Mar 2022 06:07 PM
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான சிவசங்கருக்கு, போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்பட்டது

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான சிவசங்கருக்கு, போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்பட்டது

அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றம்..

போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்..

வரலாறு காணாத அதிக விலையில், ரஷ்யாவிடம் இருந்து 45,000 டன் சூரியகாந்தி எண்ணையை இறக்குமதி செய்தது இந்தியா.

வரலாறு காணாத அதிக விலையில், ரஷ்யாவிடம் இருந்து 45,000 டன் சூரியகாந்தி எண்ணையை இறக்குமதி செய்தது இந்தியா.

காஷ்மீர் பண்டிட்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை அழைத்திருக்கும் பிரிட்டன் பாராளுமன்றம்

காஷ்மீர் பண்டிட்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை அழைத்திருக்கும் பிரிட்டன் பாராளுமன்றம்

பால் விலை உயர வாய்ப்பில்லை - அமைச்சர் நாசர் தகவல்

பால் விலை உயர வாய்ப்பில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். பால் விலையால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.220 கோடி நஷ்டம் இருந்தாலும் பால் விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலையில் தொலைதூர படிப்பில் சேரவேண்டாம் - யுஜிசி

அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

வேன் மோதி இறந்த பள்ளி மாணவர் உடல் நல்லடக்கம்

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவர் தீக்‌ஷித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்

கொரோனாவால் ரத்தான மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மதுரை - சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் - சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசினார். 

கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம்-டிஜிபி

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்று டிஜிபி சையிலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 90 சதவிகித பேருந்துகள் இன்று இயக்கம் !

தமிழ்நாட்டில் இன்று 90 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தகவல். ஊழியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடரும் நிலையில் நேற்றைவிட இன்று அதிக பேருந்துகள் இயற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ரூ.4 கோடி சம்பள பாக்கி: ஞானவேல்ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சிவாகார்த்திகேயன்

தயாரிப்பாளர் ஞானவேல்ராவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பள பாக்கி ரூ. 4 கோடியை தர உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததிற்காக பேசப்பட்ட ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா வழங்கியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சிறைபிடிப்பு..!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்துள்ளது. 

Background

தமிழக முதல்வர் 5 நாள் அரசுமுறை பயணமாக, கடந்த 24 ஆம் தேதி துபாய் சென்ற நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தனிவிமானம் மூலம் சென்னை திரும்பினார்.


செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வெளிநாடு பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக அவர்கள் கூறினர. பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் ” என்றார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.