Breaking News LIVE, AUG 5: வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்ஷயா சென்.. போராடி தோல்வி
Breaking News LIVE, August 5: தமிழ்நாடு தொடங்கி சர்வதேச முக்கிய நிகழ்வுகளை பற்றி, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
வங்கதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நிலவரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்ஷயா சென்.. போராடித் தோல்வியடைந்தார்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரா படத்தின் 2வது பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
காவிரி ஆற்றில் சிக்கிய நாய்... ட்ரோன் மூலமாக உணவு வழங்கிய தீயணைப்பு துறை.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் உபரிநீர் செல்லும் காவிரி ஆற்றில் நாய் ஒன்று சிக்கி உள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக இன்று தீயணைப்புத் துறையினர் ட்ரோன் மூலமாக நாய்க்கான உணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாயினை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை.. 2 ஆண்டுகளில் ₹3.71 கோடி செல்போன்கள் மீட்பு!
கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட ₹94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ₹50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்
Breaking News LIVE, AUG 5: வயநாடு நிலச்சரிவு : உயிரிழப்பு 400-ஐக் கடந்தது. வயநாடு சூரல்மலை பகுதியில் தொடர்ச்சியாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அழுகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள் நிலம்பூரில் அடக்கம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்து சூறையாடிய போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ளது
வங்கதேச உள்நாட்டு கலவரம்: போராட்டத்தில் ஈடுபட்ட வரும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வங்கதேச ராணுவப்படைத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் உத்தரவு
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல். ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் வெற்றிப் பேரணி.
ராணுவம் இடைக்கால ஆட்சியை அமைக்க இருப்பதாக தகவல்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சி நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, பொருட்கள் வினியோகம், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
குஜராத்: வல்சாத் பகுதியில் உள்ள அவுரங்க ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 55 மாமன்ற உறுப்பினர்களில் 53 பேர் தேர்தல் நடக்கும் அறையில் உள்ளனர். அதேநேரம், முன்னாள் மேயர் சரவணன் தாமதமாக வந்ததால், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மற்றும் ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 7 வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேம்பாடியில் முகாம்களாக செயல்படும் 10 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்ல தடை விதித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மஹாராஷ்ராவில் பெய்த கனமழையால் புனே நகரின் ஏக்தா நகரில் வெள்ளம் போன்ற சூழல் நிலவுகிறது. பல வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்ததால் அங்கு தீயணைப்பு படை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். போட் கொண்டு அப்பகுயில் இருக்கும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
மும்பை: சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ள நிலையில், சந்தை நிபுணர் சுனில் ஷா கூறுகையில், "கடந்த வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை, சென்செக்ஸில் ஆழமான சரிவைக் கண்டோம். இன்று, அது ஒரு இடைவெளியுடன் எதிர்பார்த்த வரிசையில் துவங்கியது... நாம் பார்க்கிறோம். வர்த்தகம் சரியில்லாததால், சர்வதேச சந்தையானது சில காலம் இதே நிலை தொடரும். ஏனெனில் இந்திய பங்குகளை விற்கும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியாவை சீக்கிரம் நிலைநிறுத்துவார்கள். சந்தைகள் மிகவும் சீக்கிரம் நிலைபெறும். அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.” எனத் தெரிவித்தார்
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 5வது ஆண்டு நினைவு நாளில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வரும், பாஜக தலைவருமான நிர்மல் சிங் கூறுகையில், "இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இன்று ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 370 மற்றும் 35A சட்டத்தை நீக்கி, அரசியலமைப்பை அமல்படுத்தியது. ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதிலும், அதன் முடிவுகள் இன்று வெளிவருகின்றன, இங்கு பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகள் சிறையில் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு முன்பு அமைதியான காலம் இங்கு இல்லை. ஜம்முவில் படிக்கும் சூழல் இல்லாததால் பெரும்பாலானோர் படிக்கவில்லை. இன்று இங்கு படித்து டாக்டர்களாகி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் திறக்கும் குறைக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் காலை 9:00 மணிக்கு 50,000 கன அடியாக குறைக்கப்பட உள்ளது.
கார் விபத்தில் சிக்கி மதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் உயிரிழந்துள்ளனர்.
Background
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை - அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 செ.மீ., மழை பதிவு
- தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்நாதன் நியமனம்
- திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறிவிட்டது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கடல்போல் காட்சியளிக்கும் கல்லணை - காண குவியும் பொதுமக்கள்
- வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக அதிகரிப்பு - அடையாளம் தெரியாத 8 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்
- 6 ஆண்டுகளாக தேர்வுகளை மேம்படுத்த தேசிய தேர்வு முகமை எதுவும் செய்யவில்லை - இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் மையமாகவே பார்ப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
- அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அம்மாநிலத்தில் அரசு வேலை - முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
- மேற்குவங்கத்தில் பெண் அதிகாரி சர்ச்சையால், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அமைச்சரை பதவி விலகும்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு
- இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
- வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை - பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு
- மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் போர் பதற்றம் - லெபனானை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
- பாரிஸ் ஒலிம்பிக் தனிநபர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்ஷயா சென் இன்று விளையாடுகிறார்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸ் தனிநபர் பிரிவில், ஜோகோவ்ச் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
- இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், டிராவிட்டின் சாதனையை முறியடித்து ரோகித் 4வது இடத்திற்கு முன்னேற்றம்
- டி.என்.பி.எல்: கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -