Breaking News LIVE: வயநாட்டில் நிலச்சரிவு: மீட்புக் குழுவினருடன் உரையாடிய ராகுல்காந்தி

Breaking News LIVE, Aug 2: கேரளா நிலச்சரிவு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான, உலகின் முக்கிய செய்திகளின் அப்டேட்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 02 Aug 2024 09:51 PM
வயநாடு நிலச்சரிவு : IAS அதிகாரிகளுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றுள்ள IAS அதிகாரிகளுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .


கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல்

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு


கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது கேரளாவில் சில நாட்களில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் நதிக்கரை ஓரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள். அதேபோல அந்த நேரங்களில் முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் படை எடுப்பர். இந்த சூழலில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று தாக்கல். செய்யப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வர இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை வரும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிபாடுகளில் நடத்துவதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை செய்து தர வேண்டும் என கேரள காவல்துறைக்கும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை மட்டுமல்லாது வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் தனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் குற்றச்சாட்டு

விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் தனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு

Aadi Velli Kuthuvilakku Poojai : 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

ஆடி வெள்ளியை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே முதல்முறை... சென்னையில் வியக்க வைக்கும் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்.

இந்தியாவிலேயே முதல்முறை... சென்னையில் வியக்க வைக்கும் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்.


போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் கட்டப்பட்டு வருகிறது டபுள் டெக்கர் மெட்ரோ பாலம். கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Corridor) மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Corridor) ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளன

8ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் ஒன்றுகூடி ₹4 லட்சம் செலவில் விழா அரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டைகீழக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள். 8ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் ஒன்றுகூடி ₹4 லட்சம் செலவில் விழா அரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் இணைந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

மி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் இணைந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

Sriperumbudhur Motherson Electronics : ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ்

Sriperumbudhur Motherson Electronics : ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ்


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி செலவில், 67 ஏக்கர் பரப்பளவில், தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

ஆடிப்பெருக்கு திருவிழா,பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை.

ஆடிப்பெருக்கு திருவிழா,பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை - புதுச்சேரி கல்வி துறை.


ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆற்று படுகை, கடலோரம் உள்ள மக்கள்  இந்த ஆடிப்பெருக்கை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.


இதனையொட்டி பொதுமக்கள் நலன்கருதி புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Wayanad Landslide Death Toll : வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 336-ஆக உயர்ந்த சோகம்

Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 336-ஆக உயர்ந்த சோகம்.. மேப்பாடி, சூரல்மலை ஆகிய இடங்களில் நான்காவது நாளாக தீவிர மீட்புப்பணி நடந்து வருகிறது. 

Arunthathiyar Reservation : அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்





Nayanthara - Vignesh Shivan : வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

Nilgiri Landslide Rumour : ”வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” -மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

“நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” -மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Aadi Velli Raja Mariamman : ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ ராஜ மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி அபிஷேகம்..

Aadi Velli Special Dharshan :


ஆடி வெள்ளியை ஒட்டி, ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ ராஜ மாரியம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களின் அபிஷேகம் நடைபெற்றது.


பின் ஊஞ்சலில் சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ‘முதல் பயண' செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் ‘முதல் பயண' செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலே முதல் மாநிலம் தமிழ்நாடு..! - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் இந்தியாவிலே முதல் மாநிலம் தமிழ்நாடு..! - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம்

Breaking News LIVE: வரும் 8ஆம் தேதிவரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து - ஏர் இந்தியா

இஸ்ரேலுக்கான விமான சேவை வரும் 8ஆம் தேதிவரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: இமாச்சலின் சமீபத்திய காட்சிகள்

இமாச்சல பிரதேசம் பார்வதி ஆற்றின் மலானா அணை உடைந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்திய குலுவின் ஷாட் கிராமத்தின் சமீபத்திய காட்சிகள்.





கேரளா - 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு

கேரளாவின் முண்டக்கை அருகே படவெட்டிக்குன்னு எனும் பகுதியில் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 4 பேர், 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Breaking News LIVE: இமாச்சல பிரதேசத்தில் மீட்புப் பணிகள் காட்சிகள்

இமாச்சல பிரதேசம் ராம்பூரில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சமீபத்திய காட்சிகள்.






நேற்று, ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் இறந்தனர் மற்றும் 49 பேரைக் காணவில்லை.

Breaking News LIVE: போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை வலுப்படுத்த ரூ.5.91கோடி

ரூ.5.91கோடி செலவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை வலுப்படுத்த உள்ளது.


மத்திய அரசின் நிதி உதவியுடன் காவல், சிறை, நீதிமன்றம் மற்றும் தடவியல் துறைகளிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் விரைவாக மேற்கொள்ள ICJS -2.0 ஆக தரம் உயர்த்தப்பட்டும்- முதலமைச்சர் ரங்கசாமி.

Breaking News LIVE: பொது மருத்துவமனைக்கு புது கட்டடம் - புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட் அறிவிப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவ பிரிவுகள் மற்றும் மருந்தகங்கள் தொடங்கப்படும். காரைக்காலில் உள்ள பொதுமருத்துமனைக்கு புது கட்டடம் கட்டப்படும்.


புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள சாமி சிலைகள், தங்கம் வெள்ளி ஆபரணங்கள், அசையும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மின்னனு முறையில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோவில் நில சொத்துக்களின் நில அளவு மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட  கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் அறிவிப்பு 

Breaking News LIVE: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு - புதுச்சேரி முதல்வர்

மீனவர்களின் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 இருந்து ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்,
மழைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்- முதலமைச்சர் ரங்கசாமி.

Breaking News LIVE: முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீர்

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு: மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு அணையை வந்தடைந்தது.





Breaking News LIVE: உதகை மலைப்பாதை ரயில் சேவை நாளை வரை ரத்து 

 


மேட்டுப்பாளையம் - உதகை வரையிலான ரயில் சேவை நாளை வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் - முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


மேலும், இலவச அரிசி  மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Breaking News LIVE: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி: ஏன்? எப்போது?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 


காலை 7 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது. 

18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், தனது ஊழியர்களில் 15 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் ரூ.1.6 லட்சம் கோடி செலவினங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு குறைவு

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு  விநாடிக்கு 167156 கன அடியாக குறைந்தது.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகா மாநிலங்களில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


அந்த தண்ணீரானது கடந்த 30ம் தேதி அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,23,376 கன அடி தண்ணீர் வந்த நிலையில் மாலை 6 மணியளவில் 1,69,415 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணி வரை நிலவரப்படி 1,67,156 கன அடி வந்து கொண்டுள்ளது.


அந்த தண்ணீரில் 1,65,6365 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 700 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. இது நேற்று மாலை 6 மணிக்கு வந்த தண்ணீரை விட 2259 கன அடி குறைவு.

Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 27 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு


கேரள நிலச்சரிவில் சிக்கி ஆசிரியர்கள் உட்பட 27 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முண்டக்கை பகுதியில் இருந்த மேல்நிலைப்பள்ளி உட்பட இரண்டு பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் 23 மாணவர்களை காணவில்லை. தேடும் பணி நாளாவது நாளாக தொடர்ந்து வருகிறது. 


இதனிடையே வயநாடு நிலச்சரிவில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டநிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாடாளுமன்றத்தில் சக்கரவியூகம் தொடர்பான எனது பேச்சு சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் எனது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கதவுகளை திறந்துவைத்துக் கொண்டு, தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் நான் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.





Background


  • பட்டியலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு - திராவிட மாடலுக்கு மற்றுமோர் ஒரு அங்கீகாரம் என முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

  • ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலை கடந்த மாதம் பெறாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெறலாம் - தமிழ்நாடு அரசு

  • ஆடிப் பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு

  • திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

  • பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

  • போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைப்பு

  • முண்டக்கை, வெள்ளிமலயைச் சேர்ந்த 27 மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு - 23 மாணவர்களை காணவில்லை என தகவல்

  • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறப்பு - உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு

  • வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்

  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - 13 பேருக்கு எதிராக சிபிஐயின் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

  • இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஹிஜிபுல்லா அமைப்பு

  • காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் 15 பேர் பலி

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இன்று களமிறங்குகிறார்

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.