Breaking News LIVE: அருணாச்சலப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ஆர்த்தி Last Updated: 09 Mar 2024 05:53 PM
தொகுதிப் பங்கீடு - காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். 

அருணாச்சலப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

அருணாச்சலப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ போசம் கிம்மன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

என்னுடைய ஆட்டம் மோசமா இருந்தால் ஓய்வு பெற்றுவிடுவேன் - ரோகித் சர்மா

என்னுடைய கிரிக்கெட் மோசமாக இருந்தால் நானே ஓய்வு பெற்றுவிடுவேன், சமீபகாலமாக நான் சிறப்பாகவே விளையாடி வருகின்றேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

அசாமில் ரூபாய் 17 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அசாமில் ரூபாய் 17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Breaking News LIVE: தேர்தலில் போட்டியில்லை; திமுக கூட்டணிகளுக்கு பரப்புரை - கமல்ஹாசன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்றாலும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் பரப்புரை மேற்கொள்ளும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். 

Breaking News LIVE: கமல்ஹாசன் கட்சி மக்களவையில் போட்டியில்லை; ராஜ்யசபாவில் ஓர் இடம் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு  இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கமல் கட்சி போட்டியிடாத நிலையில் மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன்

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து

மத்திய பிரதேச தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அரியலூரில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்த விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது

அரியலூரில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்த விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE: கடந்த 5 நாட்களில் ரூ. 1700 உயர்ந்த தங்கம் விலை.. ரூ.49,000 கடந்து விற்பனை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,200 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,960  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,620 ஆகவும் விற்பனையாகிறது.

கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை

கர்நாடகாவில் பெண்கள் பாதுகாப்பு கருதி பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சங்கரன்கோவில் அருகே சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking News LIVE: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

சென்னை ஆர்.ஏ புரம், வேப்பேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 6 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

நாளை திமுக வேட்பாளர் நேர்காணல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை நேர்காணல் நடத்துகிறது திமுக. அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை நேர்காணலை நடத்துகிறார். அப்போது தொகுதி நிலவரம், வெற்றிவாய்ப்பு குறித்து விளக்கம் கேட்க இருக்கிறார். 

பைக் டாக்ஸிகளுக்கு தடை

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோரிக்ஷா தொழிற்சங்கங்களின் ஆட்சேபனையைத் தொடர்ந்து, கர்நாடக அரசு 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் டாக்சி திட்டத்தை ரத்து செய்துள்ளது. கர்நாடக எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 ஐ நிறுத்துவதற்கான முடிவு மார்ச் 6 அன்று போக்குவரத்துத் துறையால் அறிவிக்கப்பட்டது.

Background

Petrol Diesel Price Today, March 9: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 9ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 658வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.