Breaking News LIVE: மூன்றாவது முறையாக வாராணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
உத்தரபிரதேசம்-51, மேற்கு வங்கம் - 20, மத்தியபிரதேசம் - 24, குஜராத்-15, ராஜஸ்தான்- 15, கேரளா -12 தெலுங்கானா -9 அசாம்- 11, ஜார்கண்ட்- 11, சத்தீஸ்கர்-11, டெல்லி- 5, ஜே&கே - 2, உத்தரகாண்ட்- 3, ஆந்திரம் - 2 கோவா- 1, திரிபுரா- 1, அந்தமான்- 1, டாமன் - 1.
பன்சூரி ஸ்வராஜுக்கு புதுதில்லியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம் - 24, மேற்குவங்கம் 20, குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு தலா 15, கேரளா 12, சத்தீஸ்கர் 11, அசாம் 11, ஜார்க்கண்ட் 11 என வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதற்கட்ட பட்டியலில் அவரது பெயர் இல்லை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாஜக மேலிடம் மக்களவைத் தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடவுள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல் பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா குஜராத் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
பாஜக மீண்டும் 34 அமைச்சர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பினைக் கொடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இதில் வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ளார். முதற்கட்டமாக 190+ இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பணியாற்ற 4 குழுக்களை அமைத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க வேண்டிய தேவை இருந்தால் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கமலாலயத்தில் நாளை மறுநாள் தமிழக பா.ஜ.க. மாநில மையக்குழு ஆலோசனை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே தெற்கு ரயில்வேயில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 3, 3, 2024 அன்று மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ரயில்களை இயக்க உள்ளது. அதேநேரம், வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 முதல் 10:00 மணி வரையில் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும், மாலை 08:00 முதல் 10:00 மணி வரையில் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மார்ச் 4ம் தேதி முதல் த.மா.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்காக விருப்பமனு வழங்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க.விடம் 4 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவைத் தொகுதியையும் த.மா.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் குண்டு வெடிப்பில் பா.ஜ.க. அரசியல் செய்யக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூபாய் 800 அதிகரித்துள்ளது. சவரன் தங்கம் ரூபாய் 47 ஆயிரத்து 520-க்கு விற்கப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையேயான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவினரும், ஜவாஹிருல்லா தலைமையிலான நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
ஜே.இ.இ. முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
வி3 யூ டியூப் சேனல் உரிமையாளர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நேரில் சோதனை நடத்தி வருகின்றனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Background
Petrol Diesel Price Today, March 2: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 650வது நாளை நெருங்கி விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 2ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 651வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -