Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 16 Apr 2024 06:07 PM
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்

சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள காங்கேர் பகுதியில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் இதுவரை ரூ.3.77 கோடி பணம் பறிமுதல்

ரூ.3.54 கோடிக்கான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலால் துறையில் 530 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் மீது ரூ.2 லட்ச ரூபாய் வேட்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள்

Breaking Tamil LIVE: பெரம்பலூரில் பாரிவேந்தருக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா பரப்புரை


Lok Sabha Election 2024: மின்னணு வாக்குப்பதிவு ; உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Vandalur Zoo : ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறது

Vandalur Zoo : ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா, பார்வையாளர்களுக்கு மூடப்படுகிறது

உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் பதஞ்சலி பாபா ராம்தேவ்

Breaking Tamil LIVE: மயிலாடுதுறை: திருமணஞ்சேரி கோயில் திருக்கல்யாண வைபவம்..!

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

Breaking Tamil LIVE: வேங்கைவயல் விவகாரம்: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துறவறம் தழுவுவதற்கு முன்னாக, தங்கள் உடைமைகளை பகிர்ந்தளித்த பவேஷ் பந்தாரி குடும்பம். ரூ.200 கோடி சொத்தை துறந்தனர்

அடுத்த ஐந்து வருடங்களுக்கான மோடியின் காரண்ட்டி கார்டு, அப்டேட் செய்யப்பட்டுவிட்டது - பிஹாரில் பிரதமர் பேச்சு

Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் நகை ரூ.54, 960க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 

Rahul Gandhi Village Cooking Channel FAKE NEWS : அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தம் - வில்லேஜ் குக்கிங் சேனல்

Rahul Gandhi Village Cooking Channel FAKE NEWS : இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம் என வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது.





Breaking Tamil LIVE: அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

Breaking Tamil LIVE: திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சமயபுரம் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூன் 8ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

Breaking Tamil LIVE: ஐபிஎல் 2024: கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 

Breaking Tamil LIVE: நெல்லை தொகுதி தேர்தலுக்கு தடை கோரி வழக்கு..!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நயினாரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    

Breaking Tamil LIVE: மக்களவை தேர்தல்; கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, வீடாக பிரச்சாரம்

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வீடு, வீடாக பரப்புரை மேற்கொண்டார். இதுவரை 36 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் வாக்கு சேகரித்துள்ளார். 

Background


  • மக்களவை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. வெயில் காரணமாக கூடுதலாக ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பரப்புரை முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என முக்கிய தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் இன்று பரப்புரை மேற்கொள்கின்றனர்.

  • ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் கொல்கத்தா விளையாடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மே 15 ஆம் தேதியுடன் பதவியில் இருந்து விலகுவதாகவும், லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளா. 70 வயதிற்கு மேல் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். 

  • தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.