Breaking News LIVE, July 21: மருத்துவமனையில் ICU பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி

Breaking News LIVE, July 21: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 21 Jul 2024 08:30 PM
Breaking News LIVE, July 21: மருத்துவமனையில் ICU பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி

Breaking News LIVE, July 21: மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தால், அரசு மருத்துவமனையில் ICU பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் , அவர் ICU  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

Breaking News LIVE: செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Breaking News LIVE: நிவாரன நிதியை தர மறுக்கிறது மத்திய அரசு - டி.ஆர்.பாலு 

 


நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றட்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என டி.ஆர். பாலு தெரிவித்தார். ”கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்களுக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் உள்ளது பற்றி விவாதிக்க அனுமதிக்க வலியுறுத்தியுள்ளோம். மதச்சார்பற்ற தன்மை என்பது மோடி அரசில் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி செய்துகொள்ளும் என எதிர்பார்த்தோம். மாறாக, மோடி அரசு இன்னும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார். 

Breaking News LIVE: கேரளத்தில் நிஃபா தொற்றுகு 14 வயது சிறுவன் பலி 

 


கேரள மாநிலத்தில் நிஃபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 


மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கரூர்: அரசுக்கு எதிராக போராட்டம் - 50க்கும் மேற்பட்டோர் கைது

கரூரில் இந்து முன்னணி சார்பில் கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது.

Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த பி.என்.ஸ்ரீதர் இந்து அறநிலைத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று புதிய ஆட்சியராக அழகு மீனா IAS குமரிமாவடத்தின் 53வது ஆட்சியராக கோப்புகளை கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதில் பெண் ஆட்சியர்களில் குமரி மாவட்டத்தின் 3 வது பெண் ஆட்சியர் அழகுமீனா ஐஏஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்றப்பின் முதல்முறையாக முதலமைச்சர் அவரை சந்திக்கவுள்ளார்.

Background


  • நீட் தேர்வு முடிவு வெளியீடு - தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி

  • எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தி - அமைச்சர் உதயநிதி 

  • போதிய பேருந்துகள் இல்லை என கிளாம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை

  • இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர்

  • அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான் - இயக்குனர் பா. ரஞ்சித்

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் கைது - கட்சியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவு

  •  பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் சூழலில், யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா

  • கொரோனா பாதிப்பு - அரசால் அறிவிக்கப்பட்டதை விட உயிரிழப்புகள் அதிகம் என ஆய்வில் தகவல் - மத்திய அரசு மறுப்பு

  • நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை - அடுத்த கல்வியாண்டு முதல் அமல் என தகவல்

  • கலவர பூமியான வங்கதேசம் - ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள கண்டதும் சுட உத்தரவு

  • வங்கதேசத்தில் தீவிரமடைந்து வரும் கலவரம் - ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தாயகம் திரும்பினர்

  • இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் ஏமனில் பதற்றம்

  • ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் - ஜெலன்ஷிக்கு உறுதியளித்த டிரம்ப்

  • சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

  • டி.என்.பி.எல். கிரிக்கெட் - நெல்லை அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி

  • மகளிர் ஆசிய கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.