Breaking News LIVE, Aug 09: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - அரசு அறிவிப்பு
Breaking News LIVE, Aug 09: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுவுக்கு சென்று பார்வையிட உள்ள பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE, Aug 09: தமிழ்நாட்டில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 மற்றும் 4வது சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரவு 10 மணிவரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு கவுந்தம்பாடியில் செயல்படும் பந்தன் வங்கியில் வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து ரூ.32.14 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி மேலாளர் மற்றும் 2 பெண் ஊழியர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கி மேலாளர் கார்த்திகேயன், கலெக்ஷன் அலுவலர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Breaking News LIVE, Aug 09: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Breaking News LIVE, Aug 09: இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் , பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை, மாநிலங்களவை நடைபெறவிருந்தது. ஆனால், ஒருநாளுக்கு முன்பாகவே முடிவுக்கு வந்துள்ளது.
கோவை மாவட்டம் கணியூரில் 8.5 அடி உயரம் கொண்ட , மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை: ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை ₹470 கோடி செலவில் 3.8 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
"நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?" கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் ₹1000 வழங்கும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - பாஜக மாநில நிர்வாகியான வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்
ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக பால் கனகராஜ் பணியாற்றியதால் அவர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து : சவுக்கு சங்கரின் தாயார் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு தீர்ப்பளித்துள்ளது
நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி. நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன 131 பேரை தேடும் பணி இன்று 11-வது நாளாக நடைபெற்றுவருகிறது. மீட்பு படையினருடன் இணைந்து உறவினர்களும், தாங்கள் தொலைத்த உறவுகளைத் தேடி வருகிறார்கள்
2024 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்க உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் சுமார் 11,000 பேர் பாரிஸில் கூடினர். அவர்களிடையே, கடந்த இரண்டு வாரங்களில் நடத்திய சோதனையில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், ஆஸ்திரேலிய வீரர்கள் அல்லது நீர்சார்ந்த விளையாட்டு வீரர்கள் என கூறப்படுகிறது. தொற்று உறுதியானலும், வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை காட்டுவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கேரளா: பாலக்காடு மலம்புழா என்னும் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மக்களின் பாதுகாப்புக் கருதி அணை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் உக்கடம் - ஆற்றுப்பாலம் இடையே ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ₹470 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இளநிலை (எம்.பி.பி.எஸ்) இறுதியாண்டு படிக்கும் மாணவர் சக்தி (வயது - 22), கல்லூரி ஹாஸ்டலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உறங்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மாநகராட்சி சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் ₹15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனை சந்தையில் அனைத்து பணிகளும் நிறைவு வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 366 கடைகளைக் கொண்ட இந்த சந்தையில் சிசிடிவி கேமரா, கழிவறை, மீன்களை வெட்டி சுத்தம் செய்ய தனிப்பகுதி, பைக் மற்றும் கார் பார்க்கிங் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் உரை, முதலமைச்சருக்கு காவல்துறை மரியாதை, அணிவகுப்பு, கொடியேற்றுதல் என அனைத்தும் ஒத்திகை பார்க்கப்பட்டன.
"இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்"
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வரும் 20ம் தேதி வரை பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வந்து சேருமாறு அறிவுறுத்தல்.
உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்று (ஆக.9) முதல் 7 நாட்களுக்கு ரத்து!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த செய்தி, மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலை ரயில் பாதையில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்ற எதிரியாக சேர்ப்பு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்காக ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்க உள்ளனர்
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளுக்கும், டீசல் ரூ.92.34 காசுகளுக்கும் விற்பனையாகிறது
Background
- அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.100 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் - கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
- 2 நிதியாண்டுகளில் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத மத்திய அரசு - திமுக எம்.பி., தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் மூலம் அம்பலம்
- தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு - இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர் தகவல்
- கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தால் நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பிவைப்பு
- கல்வி என்பது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
- ஊழல் வழக்கில் கைதாகியுள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் - பிரதமர் மோடி
- உத்தரபிரதேசத்தில் ஆடைகள் களைந்த நிலையில் 9 பெண்கள் - சீரியல் கில்லரின் திகில் கதை
- பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா - கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில் 5 முறை ஃபவுல் ஆன போதும் பதக்கம் வென்று அசத்தல்
- ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டிடியில் இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தல் - ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
- ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு பரிசு மழை - வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு அறிவித்த பஞ்சாப் முதலமைச்சர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -