Breaking News LIVE, Aug 07: ஆழமான அன்பை பரிசாக பெற்றுள்ளீர்கள் - நயன்தாரா
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்
ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிகுப்பம் கிராமத்தில் நாவல் பழம் பறிக்க, அங்குள்ள ஓடையை கடந்து செல்ல முயன்றபோது மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சஞ்சய் (10), பிரியதர்ஷினி (10) மற்றும் சுபஸ்ரீ (8) ஆகிய மூன்று குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை
புதுச்சேரி: அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவ உபகரணத்தை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு.
சம்பவத்தில் தொடர்புடைய மகாத்மா காந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ அஜாக்கிரதையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ₹7.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவிட்ட 45 நாளுக்குள் உரிய தொகையை மருத்துவமனை தரப்பு தராமல் இருக்கும்பட்சத்தில், 9% ஆண்டு வட்டியுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தொகையைத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து உள்ளே இருந்த கருவி அகற்றப்பட்டது
எந்த சாதனையையும் மிஞ்சும் அளவிற்கு நீங்கள் ஆழமான அன்பை பரிசாக பெற்றுள்ளீர்கள் - நயன்தாரா
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை.
அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ₹70,000 பணத்தை கைப்பற்றி விசாரணை
இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு..
இந்திய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவிப்பு; அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்; அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் ரியான் பராக் அசத்தல்
வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றபோது ட்வீட் செய்யாத பிரதமர், தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு ட்வீட் செய்கிறார். இந்திய ஒலிம்பிக் சங்கம், பாரிஸுக்கு சுற்றுலா சென்றுவிட்டதா? பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரபிஸ்டுகளுக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படியான தவறுகளா! - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன்
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!
"பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, அதை வைத்து தமிழர்களுக்கு அச்சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக பேசிய ஒன்றிய இணையமைச்சர் ஷோபா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படும்" : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.
செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கோருவது குறித்து முடிவெடுப்பதற்கு, 10 நாட்கள் கால அவகாசம் அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்; ஓய்வறையில் படுத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஆகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா (37) பேருந்து நிலையத்தில் ஓய்வறையில் படுத்திருந்து எழுந்தபோது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து, வலி ஏற்பட்டு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். எதிர்பாரா நிலையில் பிரசவம் ஏற்பட்டதால், குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது.
அங்கிருந்தவர்கள் பதறிப்போய் உடனே ஆம்புலன்ஸை வரவழைத்த பின்பு, ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
FIFTY FIFTY FF-105: லாட்டரி பரிசுகளின் மொத்த விவரம்
1st Prize: Rs 1 CRORE
2nd Prize: Rs. 5 LAKH
3rd Prize: Rs. 5,000
Consolation Prize: Rs. 8,000
4th Prize: Rs. 2,000
5th Prize: Rs. 1,000
6th Prize: Rs. 500
7th Prize: Rs. 100
"சில சமயங்களில், மிக உறுதியானவர்கள்தான் கடினமான தடைகளை சந்திக்கிறார்கள். வினேஷ் போகட், நீங்கள் தனியாக இல்லை. உயர்ந்த ஆற்றல் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் ஏற்றத்திலும், தாழ்விலும் உங்களுடனே நிற்கிறோம்” - சமந்தா.
Dell Layoff 12,500 Employees : 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த DELL நிறுவனம்!
12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அமெரிக்காவைச் சேர்ந்த கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL! செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த ஆண்டு டெல் நிறுவனம் 13000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
புதுச்சேரி போதை பொருள் தடுப்பு தலைமை காவலர் வசந்த் என்பவர், ஊசுடு தொகுதிக்குட்பட்ட அம்மா நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக சகோதரர்கள் சதீஷ், பிரதீப் ஆகிய இருவரை வில்லியனூர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் பிடிக்க சென்றபோது காவலர் வசந்த்தை சகோதரர்கள் இருவரும் குக்கர் மூடி மற்றும் கற்களால் அடித்து, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் மிக ஆபத்தான நிலையில் காவலர் வசந்த் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், ₹6.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ₹30 கோடி மதிப்புடைய அதிநவீன மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Tambaram German Shepherd Dog : Penalty To Owner Divya : மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில், தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக திவ்யா என்ற பெண்ணுக்கு ₹50,000 அபராதம் விதிப்பு..
”தாம்பரம் மாநகராட்சி உத்தரவு நாய் யாரையும் கடிக்கவில்லை, வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்னை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர்” என திவ்யா விளக்கம்.
திவ்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் முன்பாக விளக்கம் அளித்து அபராத விலக்கு கோரவுள்ளதாக தகவல்!
"பஞ்சாலை தொழிலுக்கு தமிழ்நாடு அரசு நிறைய உதவிகள் செய்துகொண்டுதான் இருக்கிறது. பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசு 11% வரி விதிக்கிறது, இந்தியாவில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை.
சில சலுகைகள் அளிப்பதால் மத்தியப் பிரதேசத்திற்கு சில கார்மென்ட் நிறுவனங்கள் சென்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு அங்கு இருக்காது" - கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேட்டி..
ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் வீழ்ந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்
“அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல வினேஷ் போகத்; மீண்டும் அதே வலிமையுடன் மல்யுத்த களத்தில் வினேஷ் போகத் இறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது; வினேஷ் போகத், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தவர்; உங்களின் பலம் போன்று ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்கு துணையாக நிற்கிறது” - மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் பதிவு
"உங்களின் எண்ணற்ற சாதனைகள், இந்தியாவிற்கு நீங்கள் கொண்டு வந்த பெருமையை இந்த சம்பவம் மறக்கடித்துவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.." வினேஷ் தகுதி நீக்கம் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உருக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.
ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் பின்னடைவு கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை நிச்சயமாக உடைத்துவிட்டது. உலக சாம்பியனை தோற்கடித்த பெருமையுடன் பிரகாசிக்கும் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். இந்த துரதிர்ஷ்டம் அவரது துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையில் ஒரு விதிவிலக்கு மட்டுமே. அதில் இருந்து அவர் எப்போதும் மீண்டு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களின் வாழ்த்துகளும் ஆதரவும் அவளுக்கு எப்போதும் உண்டு.
உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகட், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக நேற்று உடல் எடையை சரிபார்த்த போது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 2 கிலோ கூடுதலாக இருந்ந்துள்ளார். இதனால், இரவு முழுவதும் விழித்திருந்து சைக்ளிங் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சுமார் 1.9 கிலோ எடையை குறைத்துள்ளார். இதன் விளைவாக, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதுவும் இன்றே அவர்களை தாயகம் அழைத்து வரும் நோக்கில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, பிற்பகல் 1.55 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் வங்கதேசத்திற்கு செல்ல உள்ளது.
அ.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ரங்கசாமி.
நிகழ்வில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் நாஜிம் அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன், சம்பத் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 560 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்ற்ம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ம் தேதி இரவு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியில் 6வது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி ஓமந்தூரர் மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலையிடம் இருந்து தொடங்கி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை திமுகவினர் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதன் இன்று காலை பதவியேற்க உள்ளார்.
புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக குஜராத் அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த கைலாசநாதன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
துணைநிலை ஆளுநராக இன்று காலை 11.20 மணிக்கு, உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவியேற்க வைக்க, பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து 24வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றீல் நீர்வரத்து சரிந்து 12,000 கன அடியாக உள்ளது. நேற்று மாலை 17,000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 12 அடியாக சரிந்துள்ளது. இருந்தும் 24வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16000 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் அவரது வீட்டில் வெற்றிலை உட்பட பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகிறார்.
அதே போன்று பிரம்ம கமல பூ செடியையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் சுமார் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பூத்து வருவதால் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை அமைதி பேரணி செல்ல உள்ளனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரா ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்தியாவும் ஒரு பதக்கம் என உறுதியாகியுள்ளது. ஆனால் அது சில்வரா இல்லை தங்கமா என்பது இறுதிபோட்டியின் வெற்றி தோல்வியை பொறுத்தே உறுதியாகும்.
இந்நிலையில் வினேஷ் போகத்தின் மாமா “அவர் தங்கப் பதக்கம் வெல்வார். இந்த வெற்றி, அவளைப் பற்றி தவறாகப் பேசியவர்களின் முகத்தில் அறைந்த அடி” என தெரிவித்துள்ளார்.
Background
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்துகின்றனர்.
அதேபோல், தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கணை வினேஷ் போகத் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. 2-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.
காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இன்னும் பல செய்திகளையும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -