Breaking News LIVE, Aug 13: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு
Breaking News LIVE, Aug 13: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
சுதர்சன் Last Updated: 13 Aug 2024 06:18 PM
Background
தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக மாவட்ட செயலாளர்கள்...More
தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதேநாளில் தான், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது. அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே, பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.திமுக மாவட்ட செயலாளர்கள்:முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வரும் 16ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் இன்று அமைச்சரவை கூட்டமும் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாவின் பிறந்தநாள். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, செப்டம்பர் 17ஆம் தேதி, திராவிட இயக்கங்களின் முன்னோடியான பெரியாரின் பிறந்தநாள்.கடந்த 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதிதான், திமுக தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், முப்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திமுக திட்டமிட்டு வருகிறது.முக்கிய முடிவு எடுக்கப்போகும் ஸ்டாலின்: அந்த வகையில், திமுகவின் முப்பெரும் விழாவை இந்தாண்டு எங்கு கொண்டாடலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில், அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதே நாளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.