Breaking News LIVE, Aug 12: சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தேனி போலீசார் நடவடிக்கை

Breaking News LIVE, Aug 12: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 12 Aug 2024 09:15 PM

Background

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - சேலத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த நீர்சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பரவலாக மழை - தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என வானிலை...More

Breaking News LIVE: சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தேனி போலீஸ் நடவடிக்கை

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.


அப்போது சவுக்கு சங்கர் கார் மற்றும் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சவுக்கு சங்கர் மீதும் தேனி மாவட்டம் பழனி செட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர ஆணையர் உத்தரவில் பதியப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.