Breaking News LIVE, Aug 10: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
Breaking News LIVE, Aug 10: உலக நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
Breaking News LIVE, Aug 10: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Breaking News LIVE, Aug 10: கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவு ஏற்பட்டதில் இருந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE, Aug 10: இன்று இரவு 7 மணிக்குள் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப்போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டிக்கு முன் எடை பார்த்தபோது 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Mufasa: The Lion King ட்ரெய்லர் வெளியானது!
டிஸ்னியின் D23 நிகழ்வில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது கணவர் ஹேமநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் பங்கேற்க 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்த இந்திய மல்யுத்த வீரர் அமன்!
2024-ஆம் ஆண்டில் 2வது முறையாக வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. வீராணம் ஏரிக்கு கடந்த ஒன்பது நாட்களாக கீழணையிலிருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது
தாம்பரம் அருகே வேப்பமரத்தடியில் வைக்கப்பட்ட அம்மன் சிலை மாயம், சிலை வைத்து 4 நாட்களே ஆன நிலையில் காணமல் போனதால் மர்ம நபர்கள் கிணற்றில் வீசியிருக்கலாம் என சேலையூர் போலீசில் பகுதி மக்கள் புகார்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ரூ.51,560-க்கும், ஒரு கிராம் தங்கம், ரூ.6445-க்கும் விற்பனையாகிறது
திருவள்ளூர்: போந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுப்பதை தட்டி கேட்ட தந்தையை தாக்கிய மணிகண்டன் என்ற இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு! மாணவியின் தந்தையை தாக்கி விட்டு வாலிபர் தலைமறைவாகியுள்ளார்.
பள்ளிகளில் இனி GOOD MORNING, GOOD AFTERNOON-க்கு பதிலாக ஜெய் ஹிந்த்.. ஹரியானா அரசு எடுத்த முடிவு
சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காணாமல் போன பச்சிளம் ஆண் குழந்தையை, 15 மணிநேரத்தில் சேலம் அருகேயுள்ள காரிப்பட்டியில் காவல்துறையினர் மீட்டனர்.
தனக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளார், வினோதினி என்ற இளம்பெண். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர்
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வரும் 12ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள மீன் விற்பனை அங்காடியை மயிலாப்பூர் திமுக எம்.எல்.ஏ. வேலு ஆய்வு செய்தார்.
2 ஏக்கர் பரப்பளவில் ₹15 கோடி செலவில் 366 கடைகளைக் கொண்டதாக, இந்த மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது
புதுச்சேரி புறநகர் பகுதிகளில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு முதல் தொடர்ந்ததால் பொதுமக்கள் சிரமம். கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது கல்வித்துறை.
Background
- தடைகள் என்பது உடைப்பதற்காக தான் - மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம், 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை
- தமிழ்நாடு முழுவதும் 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு, எஸ்பிக்களாக பதவி உயர்வு
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் கைது - சிறையில் இருந்தே திட்டம் தீட்டியது அம்பலம்
- தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் 3 நாட்கள் நிற்காது - தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அவதி
- மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க கார் பந்தயம் - சீமான் கண்டனம்
- வயநாடு நிலச்சரிவு பாதிப்பு - பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்
- வயநாடு நிலச்சரிவு பாதிப்பு - ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை
- துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெயா பச்சன் எம்.பி., காட்டம்
- இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து
- அசைவ உணவு வேண்டாம் - நொய்டா பள்ளியின் புதிய விதிமுறையால் சர்ச்சை
- கனமழை எதிரொலி - புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- செப்டம்பர் 10ம் தேதி டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி
- ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு - இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை கடிதம்
- பிரேசிலில் 62 பேருடன் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல்
- பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - இந்திய வீரர் அமன் ஷெராவத் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று அசத்தல்
- பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஃபிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் கால்பந்து அணி தங்கம் வென்றது
- பாரிஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிப் தங்கம் வென்று அசத்தல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -