Breaking News LIVE: தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிப்பு- தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரிவாக காணலாம்.
தனியார் வாகனங்களில், அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Durga Stalin Offers Prayer In Tirupati : திருப்பதியில் வெங்கடேஷ்வர சுவாமியைத் தரிசித்தார் துர்கா ஸ்டாலின்
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 5 அடுக்கு பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிற்து.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 4 இடங்களில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “நிவாரண உதவி எவ்வளவு தேவை என்பது குறித்த தகவல் அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. எங்களிடம் கிடையாது. மத்திய அரசு கொடுத்த நிதி போதுமா போதாதா என்பது குறித்த புள்ளிவிவரங்கள் மாநில அரசிடம்தான் இருக்கிறது.
மத்திய அரசு கேட்கும் நிதியை கொடுப்பதில்லை. இதுவே காலதாமதமான விடுவிப்பு. மத்தியில் பாஜக அரசு இல்லை; காங்கிரஸ் அரசு இருந்தாலும் மாநில அரசு கேட்ட நிதியை விடுவித்ததே இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.397 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பேரிடர் நிதியிலிருந்து முதல் கட்டமாக 160 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அல்காரஸ் அடுத்த சுற்றுப்போட்டியில் தியாகோ செய்போத் வில்டுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்ந்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மேற்கு வங்கம், ஒடிசாவில் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அந்த பேருந்து இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் என்னும் இடம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தை ஒட்டி வந்த திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(56) மற்றும் சக ஓட்டுநரான அதே பகுதியை சேர்ந்த குமார், திருநெல்வேலியை சேர்ந்த பாரதி (26) திருச்செந்தூரை சேர்ந்த மோனிஷ் (25) சென்னையைச் சேர்ந்த இந்துமதி உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.
மற்றொரு போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ அணி ராஜஸ்தானுடன் மோதுகிறது.
மணிப்பூர் மாநிலம் பிஷ்னுப்பூரில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த மேலும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு, பரப்புரை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேம்பால பணிகள் காரணமாக இன்று முதல் ஓராண்டுக்க தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Background
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிகபட்சமாக 78.82 சதவீத வாக்குகள் பதிவாகியது. மேற்கு வங்கத்தில் 71.84 சதவீத வாக்குகளும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற கேரளத்தில் 65.45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. முக்கிய வேட்பாளர்களான ராகுல் காந்தி, சசி தரூர், கஜேந்திர ஷெகாவத், சுரேஷ் கோபி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், நட்சத்திர வேட்பாளர்களும் போட்டியிட்ட தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 69.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 3ம் கட்டத்திற்கான அரசியல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் முழு வீச்சில் ஈடுபட உள்ளனர். அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -