Breaking News LIVE Sep 3: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு
Breaking News LIVE Sep 3: தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Breaking News LIVE Sep 3: Nivin Pauly : மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு.
திருவள்ளூர் மாவட்டம் காட்டாவூர் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை, தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்ததாக பள்ளியை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் வாக்குவாதம் - பொன்னேரி காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 103.5 கிலோ மீன்கள் பறிமுதல்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், நடைபெற்ற போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் த.வெ.க மாநாடு தொடர்பாக காவல்துறையின் 21 கேள்விகளுக்கு, நாளை பதில் அளிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. போர்பந்தர் அருகே விபத்துக்குள்ளானதில், 4 பேர் சென்றதாக கூறப்படுகிறது. ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரு கையில் செல்போன், மறு கையில் பேருந்தின் ஸ்டீயரிங் என பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார் ஓட்டுநர். இதைப்பார்த்த பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், கோவை குற்றாலம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
“ இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற துளசிமதி மற்றும் மனிசா ஆகிய தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
Background
- சென்னை & புறநகர் பகுத்களில் விடிய விடிய மிதமான மழை - தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானில மையம் கணிப்பு
- அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாத வாகனத்தில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின் - ஆர்வத்திற்கும், புதிய தேடல்களுக்குமான பலன் என பதிவு
- முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆய்வு செய்ய மத்திய அரசு உறுதி - 12 மாதங்களுக்குள் ஆய்வு செய்து முடிக்க கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு
- த்மிழக கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: கலெக்டர், எஸ்.பி.க்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டிய கனமழை
- ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்
- இன்று புரூனே பயணிக்கிறார் பிரதமர் மோடி - இருநாடுகளின் உறவை மேம்படுத்த நடவடிக்கை
- முப்படைகளையும் வலிமைப்படுத்த 1 லட்சம் கோடி மதிப்பில் தளவாடங்களை கொள்முதல் செய்ய முடிவு - இரட்டை போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் வாங்க ஒப்புதல்
- பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சிபிஐயால் கைது
- ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை - வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை
- அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என ஆய்வில் தகவல்
- ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
- நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 83 யானைகள், வரிக்குதிரைகள், மான்கள் காட்டெருமைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்
- பாராலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் - பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு குவியும் வாழ்த்துகள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -