Breaking News Live : தமிழ்நாட்டில் இன்று 1,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 26 Jun 2022 08:41 PM
நாளை அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,472 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.





அதிமுக-வை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது- சசிகலா

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுக கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எங்கள் பிரச்னையை நாங்கள சரி செய்து கொள்வோம் என சுற்றுப்பயணத்தின் போது சசிகலா தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசியல் பயணம்..! புரட்சிப் பயணத்தை தொடங்கிய சசிகலா..!

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா தற்போது தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து தமிழ்நாடு முழுவதும் புரட்சிப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். 

அசாதாரண சூழலை உருவாக்கியவர்களுக்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து

மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் நிகழும் அசாதாரண சூழலை உருவாக்கியவர்களுக்கு மக்களும் தொண்டர்களும் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் என் பக்கம் - ஓ. பன்னீர்செல்வம் கருத்து

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ”அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்; தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன்” என்று சொல்கிறார்.

சனாதானம் வேறு ; மதம் வேறு - ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதானமும், மதமும் வேறு, வேறு என்றும், மதத்தை விரும்பாதவர்கள் கூட சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். 

சிறு, குறு தொழில்களை மேம்படுத்த ரூபாய் 911.50 கோடி நிதி - முதல்வர்

தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த 911.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்தியாவில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்து 739 ஆக கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது. 

விருதுநகர் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு 3 பேருக்கு கொரோனா..!

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா..!

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஜி 7 உச்சி மாநாடு - ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். 

Background

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளுக்குக்கான உயர்கல்விக்கு மாதம்  ரூபாய் 1000 வழங்கவிருக்கிறது. இத்திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் முதல் நாளில் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். 


மாற்றியமைக்கப்பட்ட திட்டம்


2022ல் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது அரசு பள்ளியில் பயிலும் மாண்விகள் உயர்கல்விக்காக மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது என சட்டசபையில் தெரிவித்தார். 









3 லட்சம் மாணவிகள் 


வரும் ஜீலை 15 தமிழ்நாட்டின் முன்னள் முதல்வர் காமராசர் பிறந்த நாளில் இந்த திட்டத்தின் வாயிலாக மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்ப்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. முதல் நாளான இன்று (25/06/2022) மட்டும் 15000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சுமார் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் மாணவிகள் பயன்பெறுவர் என  எதிர் பார்க்க்பபடுவதாக உயர்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.