Breaking News Live : பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
ABP NADU Last Updated: 25 Jun 2022 09:04 PM
Background
மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதைக் கண்காணித்து, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த...More
மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதைக் கண்காணித்து, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:மேல்நிலைப் பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்படவேண்டும்.மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப் பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர்என்ற எவ்விதப் பாகுபாடின்றித் தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மேற்கூறியவாறு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தபோதும் பெரும்பாலான பள்ளிகள், இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்பேஸ்புக் பக்கத்தில் தொடரட்விட்டர் பக்கத்தில் தொடரயூடியூபில் வீடியோக்களை காண
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் முன் விரோதத்தால் ஞானப்பிரகாஷ் என்பவரை, கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவனர்களில் 6 பேர் பள்ளி மாணவர்கள் என தகவல். மேலும் அவர்களிடம் கத்திகள் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.