Breaking News Live : கேரளாவில், வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடப்பட்டதாக தகவல்

Breaking News Live : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்துகொள்ளலாம்.

சுதர்சன் Last Updated: 24 Jun 2022 06:33 PM
தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Vandalism In Rahul Gandhis' Office : கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை

கேரளாவில், வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடப்பட்டதாக தகவல்

ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டதை ஈ.பி.எஸ் கண்டித்தாரா? : கொதித்த ஜேசிடி பிரபாகர்

ஓ.பி.எஸ் அவமானப்படுத்தப்பட்டதை ஈ.பி.எஸ் கண்டித்தாரா? : கொதித்த ஜேசிடி பிரபாகர்

செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு - ஜேசிடி பிரபாகர் பேட்டி

செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேட்டி அளித்துள்ளார். 

Vijayakanth Health : மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்

Tasmac Bottles : டாஸ்மாக் பாட்டில்கள் : திரும்பப் பெறுவதற்கு சட்டம் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

டாஸ்மாக் பாட்டில்கள் : திரும்பப் பெறுவதற்கு சட்டம் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

குடியரசுத் தலைவர் பதவிக்கு திரௌபதி முர்மு வேட்புமனுத்தாக்கல்

குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் திரௌபதி முர்மு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோருடன் நேரில் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதில் சட்ட விதிமீறல்கள் இல்லை- சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதில் எந்தவிதமான சட்ட விதிமீறல்களும் இல்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

5-ல் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம்- சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 5-ல் ஒரு பங்கு பேர் ஆதரவு இருந்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஜீலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இபிஎஸ் தரப்பான சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி சகோதரிகள் உயிரிழப்பு

திருப்பத்தூரில் பழுதடைந்த நிலையில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி சகோதரிகளான நாகம்மாள் ( 70) மற்றும் சுந்தரி ( 65) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

இபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

யஷ்வந்த்சின்காவுக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

1 ட்ரில்லியன் டாலரே தமிழ்நாட்டின் இலக்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் தொழிற்துறை சிறப்பாக செயல்படுகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொழிற்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சபரிமலை சாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை - தேவஸ்தானம்

சபரிமலை சாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது - தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு

ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல்  செய்துள்ளார். 

மதுரையில் 10 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்..!

மதுரையில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 17 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

வீடு ஒதுக்குவதற்கு லஞ்சம் கேட்டதால் விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு ..!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பெரிய குருவாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திகேயன். வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டுவதற்காக அந்த கிராம ஊராட்சித்தலைவரின் கணவர் லஞ்சம் வாங்கிக்கொண்டு வீடு ஒதுக்காமல், தகாத வார்த்தையால் திட்டியதால் விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரசு அலுவலகங்களில் இனி மாஸ்க் கட்டாயம்

அரசு அலுவலகங்களில் மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா...125 நாள்களுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட பாதிப்பு

தமிழ்நாட்டில், 125 நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 497 பேர், செங்கல்பட்டில் 190 பேர், திருவள்ளூரில் 63 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

Background

மகாராஷ்டிர அரசியலில் தொடர் நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்து 37 எம்எல்ஏக்கள் ஆளுநருக்கும் துணை சபாநாயகருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.


மகாராஷ்ட்ராவில் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களைத் தான் கடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எதிர்ப்பாளர்கள் அணியினர் கட்சியின் எம்.எல்.ஏ நிதின் தேஷ்முக் உள்ளிட்ட பிற எம்.எல்.ஏக்களின் படங்களை வெளியிட்டுள்ளது.


ஏக்நாத் ஷிண்டே அணியினரால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு படங்களில், பிற சிவ சேனா கட்சி எம்.எல்.ஏக்களுடன் நிதின் தேஷ்முக் தனியார் விமானம் ஒன்றில் அமர்ந்திருப்பது தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில் தனது சக எம்.எல்.ஏக்களுடன் செல்ஃபீ படத்திற்குப் போஸ் கொடுக்கும் விதமாக நிதின் தேஷ்முக் உள்ளார். 


கவுஹாதியில் இருந்து சில மணி நேரங்களில் நிதின் தேஷ்முக் திரும்பியுள்ள நிலையில், இந்தப் படங்கள் அவர் சூரத்தில் இருந்து கவுஹாதி செல்லும் போது எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், ஏக்நாத் ஷிண்டெ அணியினரால் பகிரப்பட்டிருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட துல்லியமான நேரம், இடம் முதலானவை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்தப் படங்கள் தற்போது மகாராஷ்ட்ராவில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் புயலைக் கிளப்பி வருகின்றன.


சமீபத்தில் நிதின் தேஷ்முக் தான் வலுக்கட்டாயமாக சூரத் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அரசுக்கு எதிரான திட்டம் தீட்டப்படுவது தனக்கு தெளிவானவுடன் அவர் ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் மும்பை திரும்ப வலியுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.


மகாராஷ்ட்ராவின் பாலாபூர் தொகுதி எம்.எல்.ஏ நிதிஷ் தேஷ்முக் பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கடத்தலில் இருந்து தப்பிக்க நெடுஞ்சாலையில் நடந்து சென்றதாகவும், சூரத் காவல்துறையினர் தன்னைப் பிடித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். 





`ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மற்றவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பி வருமாறு வேண்டுகிறேன்.. பாஜக உங்கள் மூலமாக சிவ சேனா கட்சிக்கு எதிராகத் திட்டமிடுகிறது.. அந்தத் திட்டத்திற்கு இரையாக வேண்டாம். உங்கள் அனைவருக்கும் அனைத்தையும் பாலாசாஹேப், உத்தவ் ஜி, சிவ சேனா ஆகியோ மட்டுமே வழங்கியிருக்கிறார்கள்’ எனவும் நிதிஷ் தேஷ்முக் கூறியுள்ளார். 


இவை ஒருபக்கம் இருக்க, மாநிலங்களவை உறுப்பினரும், சிவ சேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் சிவ சேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியோருடனான கூட்டணியை முறிக்க வேண்டுமெனில், எதிர்ப்பாளர்களான எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு 24 மணி நேரங்களில் திரும்பி, கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்திக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.