Breaking News LIVE Today: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2கட்ட தடுப்பூசி டோஸ் கட்டாயம் - ரயில்வே
Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2கட்ட முழு தடுப்பூசி டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியா -சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்த தொடங்கிய பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் அவர்கள் தனிமைப்படுத்தல் இருந்து வெளிவரலாம் என்று மத்திய அரசின் புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
அதுபோன்ற தனிமைப்படுத்தலுக்கான காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் காணப்பட்டாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ, ஆக்சிஜன் செறிவு நிலை குறைந்தாலோ, நெஞ்சுவலி, உடல் சோர்வு காணப்பட்டாலோ அவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள், உணவு பொருட்கள் மற்ற பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது..
இந்நிலையில் ஒமிக்ரான் தோற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் திருச்சி விமான நிலையத்தில் செயல்பட்டுவரும் கார்கோ தற்காலிகமாக மூடப்படும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் அறிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நாடு முழுவதும் 1,41,986 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40,895 பேர் நோய்த தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒமிக்ரான் ரக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3071 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 18-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று மாலை 3.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Background
Breaking News Tamil LIVE:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் முடிவடைந்தது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிகளுடன் இன்று தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -