Breaking news live : கேன் குடிநீர்: தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

Breaking Live 26th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 26 Feb 2022 05:08 PM
கேன் குடிநீர்: தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

20 லிட்டர் கேன்களில், லேபிள்கள் முறையாக ஒட்டப்பட்டிருக்கவேண்டும். கேன் தண்ணீர், உணவுப் பொருட்களில் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” - இந்திய தூதர்

ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ஐநா தீர்மானம் - ”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்

3வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதலால் ஒரு லட்சம் உக்ரைன் மக்கள் போலந்தில் தஞ்சம்

3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடரும் நிலையில், ஒரு வாரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைன் எல்லையை கடந்து போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ரஷ்யா - போலாந்து அணிகள் மோத இருந்தது. போர் தொடர்பாக, மார்ச் 24-ம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற இருந்த போட்டியை தவிர்ப்பதாக போலந்து அறிவித்தது. 

தெலுங்கானா ஹெலிகாப்டர் விபத்து : தமிழக பெண் விமானி பலி

தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது. அப்போது, தல்கொண்டா பகுதிக்கு அருகில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதனால், ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு திரும்புவோர் தடுப்பூசி போடவிடில் கொரோனா பரிசோதனை

உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் பரிசோதனை கட்டாயம்- மத்திய அரசு 

தமிழ்நாட்டில் மார்ச் 2ல் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் மார்ச் 2ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக 5 தமிழர்கள் மீட்பு...

உக்ரைனிலிருந்து முதல் கட்டமாக சிறப்பு விமானத்தில் நாடு திரும்பும் இந்தியர்களில் 5 தமிழர்கள் உள்ளனர். முதல் கட்டமாக 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் மும்பை அழைத்து வரப்படுகின்றனர். 

சிறுவன் அப்துல்கலாமிற்கு வீடு வழங்கியது தமிழ்நாடு அரசு...

சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்திற்கு கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் வீடு வழங்கியது தமிழ்நாடு அரசு.





ருமேனியாவிற்கு பறந்தது மேலும் ஒரு விமானம்...

உக்ரைனில் இருந்து ருமேனியாவிற்கு வந்த இந்திய மாணவர்களை மீட்க ருமேனியாவிற்கு டெல்லியில் இருந்து மேலும் ஒரு விமானம் பறந்தது.

ராணுவத்தை சரணடைய சொல்லவில்லை : உக்ரைன் அதிபர்

ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

பிரிட்டன் போர் விமான பயிற்சியில் இந்தியா பங்கேற்காது - விமானப்படை அறிவிப்பு

இங்கிலாந்து போர் விமானப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை அறிவிப்பு 

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் துணை ஆட்சியர்களின் நிலையிலான 60 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரம்..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை ஒன்றிய முன்னாள் அமைச்சரும் - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் ஒருவருமான ப.சிதம்பரம் அவர்கள் இன்று (26.2.2022) காலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.



கோவை அதிமுகவின் கோட்டை இல்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவையை அதிமுகவின் கோட்டை என பொதுமக்கள் ஒருபோதும் கூறவில்லை; இனி எப்போதும் கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்தியா - இலங்கை : 2வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த டென்னிஸ் வீரர்...

“போர் வேண்டாமே, ப்ளீஸ்” என  கேமராவில் எழுதி தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றியை திட்டங்களால் சொல்வோம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி என்பதை வார்த்தையாக சொல்லாமல் முதல்வரின் திட்டங்கள் மூலம் சொல்வோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 255 பேர் பலி...

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரேநாளில் 255 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11,499 ஆக குறைவு..

இந்தியாவில் ஒருநாளில் 11,499 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக மோசமான பதிவு - ஒருவர் கைது

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகளை அடித்து கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட  வேண்டும் என்று மக்களிடம் பீதியும்  சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் கயத்தாறு காவல் நிலைய குற்ற எண் 100/22  U/S 153(A),  505(1), 506(1) IPC &  Sec 67 IT Act கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

உக்ரைனில் இணையதள பாதிப்பு..

உக்ரைன்-ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள பாதிப்பு

நடவடிக்கையை எடுத்து வருகிறோம் -  இந்திய தூதரகம்

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் உக்ரைன் எல்லைக்கு செல்லாதீர்; இந்தியர்களை மீட்க துறைரீதியிலான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் -  இந்திய தூதரகம்

எல்லைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் - இந்திய தூதரகம்

உக்ரைன் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் இந்திய மாணவர்கள் எல்லைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் - இந்திய தூதரகம்

சட்டென மாறிய வானிலை.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதியில் வரும் 28-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Powercut: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

போரூர் :


கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரைப்பாக்கம், கவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, லாலா சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.



பெரம்பூர் / பெரியார் நகர் :

 









மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. 

உக்ரைன் போர் : 1000 ரஷ்ய வீரர்கள் பலி

உக்ரைன் போரில் 1000 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா விவகாரம் : பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

கிரிப்டோ கரன்சி மீதான மத்திய அரசின் நிலைப்பாடு என்ன..? உச்சநீதிமன்றம் கேள்வி!

கிரிப்டோ கரன்சி மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் : மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்றும் மாறாத பெட்ரோல்,டீசல் விலை..

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 114-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சகம் நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 267 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சகம்  விடுவித்துள்ளது.

IND vs SL: இலங்கை டி20 தொடரிலிருந்து விலகும் ருதுராஜ் கெய்க்வாட்?

இலங்கை தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

Background

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 15 நாடுகள் ஆதரவு அளித்தநிலையில், இந்தியா நடுநிலை வகித்தது. 


இந்தியாவை தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு அமீரகமும் உள்பட பல நாடுகள் நடுநிலை வகித்தனர். ஆனால், 15 நாடுகள் கொண்ட கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா நிரந்தர உறுப்பினராக வாக்களித்தது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.