Breaking Live: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கு.. மகள், மருமகன் மீதும் வழக்குப்பதிவு..
Breaking Live 25th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ஜெயக்குமாரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி விடுவித்தது மத்திய நிதியமைச்சகம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
கோவில்பட்டி வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தல் செலவுக்காக ₹50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்ததால், மனமுடைந்து தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் ஆஜர். தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிராக தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராமிற்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,801-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,200 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 302 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ. 116 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Background
உலகளவில் இதுவரை 43.16 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 59. 46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 36.07 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -