Breaking Live: ராகுல் காந்தியைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.
Breaking Live 24th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ராகுல் காந்தியைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மார்ச் 9ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சாலை மறியல் வழக்கில் ஜெயக்குமாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
உக்ரைன் நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் , தரைத்தளம் வழியாகவும் அந்த நாட்டிற்குள் நுழைந்துள்ளன.
புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினர்.
தி.மு.க. பிரமுகரை தாக்கியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்- வில் மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்- வில் மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
Background
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் இரண்டு பகுதிகளை தன்னாட்சி பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததையடுத்து, உக்ரைனில் அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அந்த நாட்டில் 30 நாட்களுக்கு அவசர பிரகடன நிலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -