Breaking News LIVE: வீடுகள் முன்பு NO PARKING போர்டு வைக்க தடை..! நீதிமன்றம் உத்தரவு..!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Breaking News LIVE: வீடுகள் முன்பு NO PARKING போர்டு, தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்பட்ட ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
”தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியது மத்திய சுகாதாரத்துறை. தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கம்மையின் அறிகுறியாகும்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை எளிதாக தாக்குகிறது என்றும் தெரியவந்துள்ளது
இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
“திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்” -இயக்குநர் அமீர் வலியுறுத்தல்
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
₹780 கோடி வாடகை பாக்கியை செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
Background
- மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் மாநகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு
- பாராலிம்பிக் தொடரில் புது வரலாறு படைத்த இந்தியா; இதுவரை இல்லாத அளவிற்கு 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை வென்று அசத்தல்
- பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது – வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- தி.மு.க.வில் விரைவில் பல அதிரடி மாற்றம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைகளை அளிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவு
- தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறையினர் அனுமதி – உற்சாகத்தில் விஜய் தொண்டர்கள்
- நடிகர் சங்கத்திற்கான கடனை அடைப்பதற்கான கலைநிகழ்ச்சி; ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பதாக நடிகர் கார்த்தி தகவல்
- சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
- தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தன்னை சித்தர்கள் வழிநடத்துவதாகவும் மகாவிஷ்ணு போலீசிடம் வாக்குமூலம்
- தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கரைத்த பொதுமக்கள்
- விநாயகர் சிலை ஊர்வத்தின்போது கும்பகோணம், தேனி உள்ளிட்ட இடங்களில் தகராறு
- பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் மம்தாவுக்கு மே.வ. ஆளுநர் அறிவுறுத்தல்
- இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி; தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை
- ஹரியானா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்
- பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் பற்றி பேச பிரிஜ்பூஷனுக்கு பா.ஜ.க. தலைமை தடை விதித்துள்ளதாக தகவல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -