Breaking News LIVE OCT 9: TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு!

Breaking News LIVE OCT 9: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 09 Oct 2024 08:28 PM
மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மதிமுக முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மதிமுக முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

ரத்த சோகைக்கு முற்றுப்புள்ளி! அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி.. திட்டத்தை நீட்டித்த மத்திய அரசு!

பெண்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி!


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6வது நாளான இன்று மாலை, 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


மகா லட்சுமியின் செரூபமாக பெண்கள் விளங்குவதாலும், தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரியதானது என்பதாலும், பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே தங்கரதம் வீதிஉலா நடைபெற்றது.

Breaking News LIVE OCT 9: தொழிலாளர் சங்கம் அமைப்பது சட்டப்பூர்வமானது! - இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் கருத்து!

சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்தித்து விட்ட பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தொழிலாளர்களை நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவிக்கையில்,” 16 ஆண்டு காலமாக அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு தேவையானது செய்திருந்தால் சங்கம் வைத்திருக்க மாட்டார்கள். ஊழியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பாதுகாத்துக் கொள்ள, ஒரு அமைப்பு வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். சங்கம் தேவை என்பது இன்று நேற்று உருவானது அல்ல, வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது கூட சங்கம் வைக்கும் உரிமை பெற்றவர்கள். சங்கம் அமைக்கும் உரிமை சட்டபூர்வமானது.”எனத் தெரிவித்தார்.

Breaking News LIVE OCT 9: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - தொல்.திருமாவளவன் கருத்து!

சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்தித்து விட்ட பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தொழிலாளர்களை நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது பேசிய திருமாவளவன்,” முகத்தை பதிவு செய்வதில் என்ன தயக்கம் இருக்கிறது. வருகின்ற காலங்களில் சங்கம் பதிவு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை சங்கத்தின் மூலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சாம்சங் நிர்வாகத்திற்கு நாங்கள் எதிராக இல்லை அவர்களின், அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனத்தை எதிர்க்கவில்லை அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.


 

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது காவல்நிலையத்தில் புகார்

தஞ்சாவூர்: பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்

தஞ்சாவூர்: பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்


சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.


ஆசிரியர் முத்துக்குமரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நாளை காலை 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE OCT 9: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது

சாம்சங் ஊழியர்கள் 30 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனுமதி மீறி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!

ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


இதனால் வீட்டுக் கடன் , வாகன கடன் உள்ளிட்டவைகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Breaking News LIVE OCT 9: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.56, 240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்:

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகளால்  இரண்டு ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை கடத்தப்பட்டனர். இருப்பினும், 2 ராணுவ வீரர்களில் ஒருவர் தப்பித்து திரும்பி வந்து விட்டார். காணாமல் போன மற்றொரு ராணுவ வீரரை, தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. 


நாம் தமிழர் கட்சியிலிருந்து அபிநயா விலகல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்

 

கட்சித் தலைமையின் செயலால் மிகுந்த மன உளைச்சல் அடைந்து விலகுவதாக X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Background


  • புதியதாக 46 ஆயிரம் இளைஞர்களுக்குஇ வேலைவாய்ப்பு - ரூ.38,000 மோடி மதிப்பிலான 14 முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

  • ஆயுத பூஜை விடுமுறை - பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு

  • தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னயில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’

  • ரயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் - ரயில்வே போலீசார் எச்சரிக்கை

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 27 பேரின் நீதிமன்ற காவால் நீட்டிப்பு

  • ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி - ஜம்மு & காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி

  • ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு உட்கட்சி பூசல்களே காரணம் என தகவல்

  • ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி - அதீத நம்பிக்கை கூடாது என கெஜ்ரிவால் பேச்சு

  • முதலமைச்சர் சித்தராமையாவை மாற்றும் திட்டமில்லை - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேட்டி

  • திருப்பதி லட்டு சர்ச்சை மூலம் சட்ட ஒழுங்கை கெடுப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது போலீசில் புகார்

  • ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகிவிட்டது - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

  • பின்லேடன் மகன் உமர் பின்லேடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஃப்ரான்ஸ் அரசு உத்தரவு

  • நேபாளம் மலையேற்றத்தின் போது மாயமான 5 ரஷ்யர்கள் சடலமாக மீட்பு

  • துனிசியா நாடாளுமன்ற தேர்தல் - அதிபர் கைஸ் சையத் அபார வெற்றி

  • முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா எங்கே? தகவல் இல்லை என கைவிரித்த வங்கதேச இடைக்கால அரசு

  • மகளிர் டி20 உலகக் கோப்பை - இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை நடத்தும் இந்திய அணி

  • வங்கதேச அணிக்கு எதிராக இன்று 2வது டி20 போட்ட் - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.