Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

  • சென்னை கோபாலபுரத்தில் ரூபாய் 25 கோடி மதிப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா இன்று திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
  • சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய வான் படை விமான சாகசம் – லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தல்
  • சென்னையில் நடைபெற்ற விமான சாகசத்தை உலகிலேயே அதிகளவு மக்கள் பார்த்து சாதனை
  • சென்னை விமான சாகசத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – உரிய நிவாரணம் கோரி உயிரிழந்தோர் உறவினர்கள் கோரிக்கை
  • 5 பேர் உயிரிழந்த விவகாரம்; விமானப் படை சாகசத்தை காண வந்தவர்களின் வசதிக்காக கேட்கப்பட்டதை விட அதிக வசதிகள் செய்து தரப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
  • வான் சாகச நிகழ்ச்சி; 5 பேர் உயிரிழப்பு – அரசு முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
  • இந்திய வான் படை சாகச நிகழ்ச்சி; அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
  • சமுதாயத்தில் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதே காந்தி நமக்கு அளித்த போதனை – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
  • திருப்பதி லட்டு விவகாரத்தில் பக்தர்களுக்கு தேவையில்லாத குழப்பத்தை ஆந்திர அரசு ஏற்படுத்துகிறது – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
  • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 2 ஆயிரத்து 905 கோடி மதிப்பில் பயிர்க்கடன் – அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
  • நாகப்பட்டினத்தில் த.வெ.க. – சி.பி.எம். இடையே மோதல் – பலர் மருத்துவமனையில் அனுமதி
  • நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • வேலூர் அருகே தந்தை இயக்கிய டிராக்டரில் சிக்கி மகள் உயிரிழந்த சோகம்
  • செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி மாயம் – 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
  • இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை
  • ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை – 3 அடுக்கு பாதுகாப்பு
  • மேகலாயாவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
Continues below advertisement
14:23 PM (IST)  •  07 Oct 2024

மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்

14:14 PM (IST)  •  07 Oct 2024

Breaking News LIVE 7 Oct: வான் வழி சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.

14:01 PM (IST)  •  07 Oct 2024

"ஜெயலலிதா தூங்கியதால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது" - ஆர்.எஸ் பாரதி

"ஜெயலலிதா தூங்கியதால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி

13:34 PM (IST)  •  07 Oct 2024

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும் 9ம் தேதி லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

12:21 PM (IST)  •  07 Oct 2024

உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற அமர்வு கூடாததால் விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்!

12:10 PM (IST)  •  07 Oct 2024

அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம்

11:17 AM (IST)  •  07 Oct 2024

சிபிசிஐடி விசாரணைக்காக 2வது முறையாக ஆஜரானார் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்

மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்காக 2வது முறையாக ஆஜரானார் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்

10:51 AM (IST)  •  07 Oct 2024

பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்புக்கு தயாரானது. நேற்று இரவு இங்கு fountain-ல் வர்ணஜாலம் செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

09:24 AM (IST)  •  07 Oct 2024

200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைப்பு. கோயிலில் இருந்த அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

09:24 AM (IST)  •  07 Oct 2024

கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமியின் வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

09:05 AM (IST)  •  07 Oct 2024

கடலூரில் டன் கணக்கில் கிடைத்த பெரும்பாறை மீன் - விற்பனை படுஜோர்

கடலூரில் பெரும்பாறை எனப்படும் பெரிய வகை மீன்கள் டன் கணக்கில் கிடைத்ததால் ஒரு கிலோ பெரும்பாறை மீன் 400 ரூபாயில் இருந்து ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

08:50 AM (IST)  •  07 Oct 2024

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழப்பு! தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த கலையரசியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்!

08:45 AM (IST)  •  07 Oct 2024

1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்!

விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் உள்ளீடு செய்வது அவசியம். இதற்கான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

07:44 AM (IST)  •  07 Oct 2024

Kalaignar Park : கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு..

Kalaignar Park: சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

 

 "சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்" என்னும் அறிவிப்பை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

07:35 AM (IST)  •  07 Oct 2024

Rope Car Service Palani Murugan Temple : இன்று முதல் ரோப்கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு

06:52 AM (IST)  •  07 Oct 2024

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.