Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 07 Nov 2024 05:11 PM
அமேசான், பிளிப்கார்ட்டுக்குச் சொந்தமான இடங்களில் ED சோதனை

டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள  இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு

Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கின் விசாரணையானது, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய பணத்தை நாளை தருவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2 லட்சம் கோடி உயர்வு

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, டெஸ்லாவின் சொத்து மதிப்பு ரூபாய் 2 லட்சம் கோடி ஒரே நாளில் உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


சென்னை பெருநகர், புறநகரில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

"தமிழ்நாட்டு மக்களே பதிலடி தருவார்கள்" - உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

"திமுகவை அழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களே பதிலடி தருவார்கள்" - உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

அண்ணாமலையார் திருக்கோயிலின் மகா ரதம் வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது.

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெறும் அண்ணாமலையார் திருக்கோயிலின் மகா ரதம் வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது.


59 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்ட மகா ரதம் ₹70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு மாட வீதியில் ஆடி அசைந்தவாறு வலம் வர உள்ளது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பட்டியலின சான்று வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்ததை கண்டித்து, காட்டுநாயகன் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு.


சிறப்பு அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெறக்கோரி பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆதரவற்ற விதவை சான்றிதழ் - அரசு விளக்கம்.

ஆதரவற்ற விதவை சான்றிதழ் - அரசு விளக்கம்.


ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற எவ்வித துணையுமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என பொருளல்ல. அவர்கள் இருந்தும் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அனுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்பதே பொருளாகும்.


மதுரை எம்.பி., சு.வெங்கடேசனின் கோரிக்கையை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றறிக்கை

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில், கடந்த வாரத்தை காட்டிலும் பூண்டின் விலை கிலோவுக்கு ₹30 உயர்வு.

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில், கடந்த வாரத்தை காட்டிலும் பூண்டின் விலை கிலோவுக்கு ₹30 உயர்வு.


நாட்டு பூண்டு முதல் ரகத்தின் விலை கிலோ ₹340க்கும், 2ம் ரக பூண்டின் விலை ₹280க்கும் விற்பனையாகிறது.

12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்த 6 நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள

சென்னையில் இன்று காலை முதலே வெளுத்து வாங்கும் மழை

சென்னையின் பல இடங்களிலும் காலை முதலே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

Background


  • சென்னை-மற்றும் புறநகரில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை – சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

  • தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • இன்று சூரசம்ஹாரம்; களைகட்டி காணப்படும் முருகன் கோயில்கள் – லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

  • சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

  • மகாராஷ்ட்ரா சட்டசபைத்தேர்தலுக்காக காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணி வாக்குறுதிகளை அள்ளி வீசியது

  • சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகாராஷ்ட்ராவில் ரூபாய் 588 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

  • அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்

  • அதிபர் தேர்தலில் தன்னை வீழ்த்திய டிரம்பிற்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

  • தோல்வியை கண்டு சோர்வடைய வேண்டாம்; ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் தொடரும் - கமலா ஹாரிஸ்

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவல் – பிரதமர் மோடி

  • இந்தியாவில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு – பிரதமர் மோடி

  • அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்வாசவளியைச் சேர்ந்த உஷா என்பவரின் கணவர் தேர்வு

  • டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதால் எச்-1பி விசா விதிகள் கடுமையாக வாய்ப்பு

  • மாஞ்சோலை தொழிலாளர்கள் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

  • மாநிலத்தில் கட்சியை மறுசீரமைக்க இமாச்சல பிரதேச காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு

  • தமிழ்நாட்டில் 32 நீதிபதிகள் அதிரடி பணியிட மாற்றம்

  • கோவையில் வீட்டு வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை அட்டகாசம்

  • திருப்பத்தூரில் போலி போலீஸ் கும்பல் கைது

  • செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே என்று கத்தியதால் பரபரப்பு

  • அமெரிக்காவில் யார் அதிபர் ஆனாலும் ஈரான் நிலைப்பாட்டில் மாற்ம் இல்லை – டொனால்ட் டிரம்ப்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.