Republic Day 2024 Highlights: வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு; நெஞ்சை நிமிர்த்தி வீரத்தை பறைசாற்றும் வீரர்கள்

Republic Day 2024 Highlights: நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 26 Jan 2024 05:13 PM
Republic Day 2024 Highlights: தொடங்கிய தேநீர் விருந்து

75வது குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. 

Republic Day 2024 Highlights: வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு

இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்வு ஆரவாரத்துடனும் கரகோஷங்களுடனும் நடைபெற்று வருகின்றது. 

Republic Day 2024 Highlights: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அமைச்சர்கள்

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, ரகுபதி மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Republic Day 2024 Highlights: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அமைச்சர்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிர, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

பெண்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் சாகச மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு.



நேரலையில் குடியரசு தின நிகழ்ச்சிகள்

பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா விருதுபெறும் அதிகாரிகள் செலுத்திய மரியாதை..

சிறப்பு குதிரை வாகனத்தில் பயணம்.. சிறப்பு விருந்தினரான பிரெஞ்சு அதிபருக்கு மரியாதை

விழா மேடைக்கு குழந்தைகளை கொஞ்சியபடி வந்த பிரதமர் மோடி

குடியரசு தின கொண்டாட்ட விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்தார். அவரை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

குடியரசு தின கொண்டாட்டம்! பிரான்ஸ் அதிபருடன் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஏற்பதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியே வருகிறார்.

இந்திய தேசத்துக்காக உயிர் நீத்தவர்களுக்கு, மரியாதை செலுத்த வந்த பிரதமர் மோடி : வீடியோ

நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின கொண்ட்டாட்டம்! வருகை புரிந்த பிரதமர் மோடி! வரவேற்ற ராஜ்நாத் சிங்!

குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்

குடியரசு தின அணிவகுப்பு! இன்னும் சற்று நேரத்தில் குடியரசு தின மாளிகையில் இருந்து புறப்படுகிறார் ஜனாதிபதி!

குடியரசு தின அணிவகுப்பை ஏற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஜமரியாதையுடன் அழைத்து வர பாதுகாப்பு படையினர் காத்துள்ளனர்.

குடியரசு தின கொண்டாட்டம்! மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேசிய கொடியேற்றி மரியாதை!

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குடியரசு தின விழா நிறைவு! வீட்டிற்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டார்.

குடியரசு தின விழா நிறைவு! ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்று ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

குடியரசு தின அணிவகுப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள்

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் குடியரசு தின அணிவகுப்பு

டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் குடியரசு தின கொண்டாட்டம் தொடங்க உள்ளது. இதைக்காண பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை காண குவிந்த பொதுமக்கள்

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பறையிசை நிகழ்ச்சி

சென்னை காமராஜர் கடற்கரை சாலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பறையாட்டம் நடைபெற்று வருகிறது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்து வருகின்றனர்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மேக்ரானின் குடியரசு தின வாழ்த்து

குடியரசு தின கொண்டாட்டத்தில் கர்நாடக இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் ஆளுநர், முதலமைச்சர்

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு கர்நாடக இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு குடியரசு தின கொண்டாட்டத்தில் மணிப்பூர் மாநில கலைநிகழ்ச்சிகள்

சென்னையில் நடைபெற்று வரும் குடியரசு தின நிகழ்ச்சியில் மணிப்பூர் மாநில கலைக்குழுவினரும் தங்களது கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர்.

Republic Day 2024 LIVE: குடியரசு தின விழா - கொடைக்கானல் செல்பவர்களுக்கு ஆஃபர்

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை இலவசமாக சுற்றுலாப் பயணிகள் இன்று பார்வையிடலாம் என வனத்துறை அறிவித்துள்ளது

டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஆரம்பம்

டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கப்பட உள்ளது.

ஆளுநர், முதலமைச்சர் முன்பு நடனத்தில் அசத்தும் பள்ளி, கல்லூரி மாணவிகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்று வரும் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் அசத்தலான நடனத்தை ஆடி வருகின்றனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் 10 மணிக்கு தேசிய கொடியேற்றும் மேயர் பிரியா

குடியரசு தினத்தை முன்னிட்டு, ரிப்பன் மளிகை கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா காலை 10 மணியளவில் தேசியகொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

காமராஜர் சாலையில் களைகட்டும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரிய தமிழ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Republic Day 2024 LIVE: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அ.பாண்டியன் உள்ளிட்ட 5 பேருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Republic Day 2024 LIVE: குடியரசு தின விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரதீர செயல், கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது என பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.   

Republic Day 2024 LIVE: சென்னையில் குடியரசு தினவிழா - படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதை

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முப்படைகள், தேசிய ராணுவப்படை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். 

Republic Day 2024 LIVE: குடியரசு தின விழா - சென்னையில் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 

ஒன்றாக டீ குடித்த பிரதமர் மோடி, ப்ரெஞ்ச் அதிபர் இமானுவெல் மேக்ரான்

குடியரசு தின அணிவகுப்பை காண குவியும் பொதுமக்கள்!

டெல்லியில் நடக்கும் அணிவகுப்பை காண்பதற்காக மக்கள் திரண்டுள்ளனர்.அதேபோல, சென்னையில் நடக்கும் அணிவகுப்பை காணவும் மக்கள் கடற்கரை சாலையில் குவிந்துள்ளனர்.

Background

Republic Day 2024: இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


குடியரசு தின கொண்டாட்டம்:


நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடே கோலாகலமாக உள்ளது. டெல்லியில் முப்படைகளின் சிறப்பு அணிவகுப்புகளை ஏற்கும் நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.


குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றே இந்தியா வந்துவிட்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர். இதனால், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


பிரம்மாண்ட அணிவகுப்பு:


டெல்லியில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்க உள்ளார். நாட்டின் பலத்தை காட்டும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தங்களது அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். இதுமட்டுமின்றி, பல மாநிலங்களின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அந்தந்த மாநில ஊர்திகளும் இடம்பெற உள்ளது.









 


கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி:


தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மெட்ரோ பணிகள் காரணமாக காந்தி சிலை அருகே வழக்கமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது.


காமராஜர் சாலையில் முப்படைகளின் அணிவகுப்புடன் தமிழ்நாடு போலீசார், தேசிய மாணவர் படை அணிவகுப்பு, வனம் மற்றும் தீயணைப்புத்துறையினரின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.


மேலும், குடியரசு தின அணிவகுப்பில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் விருது, திருத்தி நெல் சாகுபடி விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டும், குடியரசு தின விழாவை முன்னிட்டும் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


விருதுகள்:


டெல்லியில் நடக்கும் அணிவகுப்புக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் அணிவகுப்புக்காக வீரர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டில் வானிலை என்பது அணிவகுப்பை பார்ப்பதற்கு எந்த பாதிப்பையும்  ஏற்படுத்தாது. ஆனால், டெல்லியில் கடந்த சில தினங்களாக வாட்டி வதைக்கும் குளிர் இன்றும் வாட்டி வதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் இன்று மிதமானது முதல் அடர்த்தியான பனிமூட்டம் காணப்படும் என்பதால் அணிவகுப்பை பார்வையிட சற்று சிரமமாக இருக்கும் என்று தெரிகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவகலங்களிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.