Breaking News LIVE 6th NOV 2024: கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
கோவை சிறை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
45 ஏக்கர் பரப்பளவில் ₹133 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை அனுப்பர்பாளையத்தில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
₹300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது.
தமிழக திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் இதில் பங்கேற்பு
"எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருவோம்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் அவரது பிரதிநிதிகள் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது
விழுப்புரம் மாவட்ட மாதிரிப்பள்ளியின் செயல்பாட்டினை திடீரென நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி.
அங்கு பயிலும் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடி, மாதிரிப்பள்ளியில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். மாணவர்களின் வருகை, விடுதி வசதி, சமையல் கூடம், மாணவர் தங்கும் அறை, உணவுக்கூடம், மளிகைப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து, அதுபற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு விபரம் கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடைமுக தீர்த்தவாரி பண்டிகை காரணமாக வரும் நவம்பர் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்ப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"3,500 பேருக்கு வேலைவாய்ப்பு.. வெளியூர்களுக்குச் செல்லாமல் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு கோவையிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்" கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள ELCOT தொழில்நுட்ப பூங்கா குறித்து தொழில் முனைவோர் பேட்டி
"2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் நீடிப்போம்" - உறுதிபட தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்
Kodiveri Falls : கொடிவேரியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வ தடை விதிக்கப்பட்டது!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்டதால் பரபரப்பு.
சடலத்தை கைப்பற்றி வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது, ரூ.42 கோடி ரூபாய் செலவில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்!
Background
- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள, முதல்கட்டமாக விமானம் மூலம் இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- புதியதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழியவேண்டும் என கருதுகின்றனர் என, தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
- ”முதல்வர் மருந்தகம்” அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரியது தமிழ்நாடு அரசு - முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு
- திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவிப்பு
- ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
- கனடாவில் இந்து மத கோயில்களுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் - காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மத்தியபிரதேசத்தில் திருடர்கள் என கூறி சிறுவர்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு, அடித்து சித்ரவதை - 3 பேர் கைது
- பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தடை தீபாவளியின் போது என்ன ஆனது? டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- நிலமுறைகேடு விவகாரம் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆஜராக போலீசார் சம்மன்
- அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? - பலத்த பாதுகாப்புடன் 50 மாகாணங்களிலும் இன்று வாக்குப்பதிவு
- அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் தீவிர பரப்புரை - நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்ற வலியுறுத்தல்
- இந்திய அணியின் தொடர் தோல்விகள் - பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ திட்டம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -