Breaking News LIVE: விநாயகர் சதுர்த்தி: சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 04 Sep 2024 07:26 PM

Background

பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 5 பதக்கங்கள் – குவியும் வாழ்த்துகள்பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 பதக்கங்களை குவித்தது இந்தியாபாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தல்சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றார் முதலமைச்சர்...More

பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

"பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை கமிட்டி செய்யும் பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டி மூலம் புகார்களை அளிக்கலாம். நேரடியாக ஊடகங்களில் பேச வேண்டாம் என அறிவுரை" - தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்