Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது, ரூ.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்! - அமைச்சர் சேகர் பாபு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவ.14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
குற்றப்பத்திரிகை நகலை 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவு.
"உள்துறை அமைச்சர் பதவியையும் நானே ஏற்பேன்" -ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு!
"எங்க கட்சி பெயரில் தேசியமும் இருக்கிறது திராவிடமும் இருக்கிறது.." - தவெக கொள்கை குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக கோவையில் நடைபெற்று வரும் முகாமில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வருகை.
174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் வரும் 10ம் தேதி வரை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
"ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தா மட்டும் பத்தாது.. அதை நிறைவேற்றணும். நாம் அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்” ”நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்"
- கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் ₹2.89 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குளம் சீரமைப்புப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
குளக்கரை சீரமைக்கப்பட்டு குளத்தைச் சுற்றி திறந்தவெளி உடற் பயிற்சிக் கூடம், நடைபாதை, செயற்கை நீரூற்று, இறகுப் பந்து மைதானம், யோகா மேடை, இளைப்பாறல் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.
தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என சென்னை மாநகர போலீசார் அறிவிப்பு!
சென்னை கொளத்தூர் பகுதியில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அங்கு அமைக்கப்பட்ட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கியதுடன், புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு குடும்ப அடைகளையும் வழங்கினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்' - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
₹2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
கோ ஒர்கிங் ஸ்டேஷன் எனப்படுகின்ற பணி செய்வதற்கான தளம் உள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்' - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் & அலிட் சயின்சஸ் (INMAS) அமைப்பில் Research Associate, Junior Research Fellowship உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணல் டிச.2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
டெல்லியில் உள்ள INMAS அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. தகுதியுள்ளோர் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது
கோவையில் நடைபெற்ற இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம். அடிப்படை வசதிகள் இல்லாததால் சாலையோரங்களில் படுத்து உறங்கிய இளைஞர்கள். இன்று அதிகாலை 5 மணிக்கு முகாம் தொடங்க இருந்ததால் தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, டாமன் டையூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று காலை முதலே இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்களுக்கு இரவு உறங்க இடமில்லாமல், காவலர் பயிற்சி மைதானம் எதிரே சாலை ஓரத்தில் உள்ள பிளாட்பாரத்திலேயே உறங்கியுள்ளனர்.
குன்னூர் தாலுகாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பி வருவதால் சென்னையில் நுழைவுப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Background
- தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்
- தீபாவளிக்காக வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
- சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளால் கிளாம்பாக்கத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் – கூடுதல் மின்சார ரயில்களுக்கும் ஏற்பாடு
- அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள் – உமர் அப்துல்லா கண்டனம்
- தொடர் தாக்குதல்கள்; இன்று கூடுகிறது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டம்
- எனது தந்தை கொலை வழக்கில் சிக்கியவரை கட்டியணைத்து பரிவு காட்டியவர் பிரியங்கா காந்தி – ராகுல் காந்தி பேச்சு
- மோடி அரசாங்கம் அவர்களது பணக்கார நண்பர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது – பிரியங்கா காந்தி
- மாவட்ட வாரியாக ஆய்வுப்பணி; கோவையில் நாளை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க முடியும் என்ற மாயையை உருவாக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
- சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக முயற்சிக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு
- அடுத்தடுத்து அதிரடி; தமிழ்நாடு முழுவதும் வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்?
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு; வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- தமிழ்நாட்டில் வரும் 9ம் தேதி வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை; இன்றும், நாளையும் ரத்து
- ஈரோட்டில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை விற்பனை – 5 பேர் கைது
- கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்திலே மது அருந்தும் தி.மு.க. பிரமுகர் – ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வைரல்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மழைநீரை அகற்றக் கோரி தாசில்தாரை முற்றுகையிட்ட மக்கள்
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து இந்தியா மோசமான சாதனை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -