Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!
நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்
லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்தினார் பின்னணி பாடகி பி.சுசீலா!
தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Udhayanidhi Pawan Kalyan: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது, அப்படி சொன்னவர்கள் தான் அழிந்துபோவார்கள் என கூறியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி, “அதையும் பொறுத்து இருந்து பார்ப்போம்” என பதிலடி தந்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகிராம் சுரத்குமார் என்கிற விசிறி சாமியார் ஆசிரமத்தில் 2000ற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய நவராத்திரி விழா!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் கச்சேரியை பக்தி பரவசத்துடன் ரசித்த பக்தர்கள்!
மகனை கொலை செய்து கைதான தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரான ராமசாமி (74), மதுபோதையில் தொடர்ந்து தொல்லை செய்து வந்த தனது மகனை கடந்த 1ம் தேதி கொலை செய்தார் கைதான ராமசாமி உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவ.09, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவு
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் 7 - 11ம் தேதி வரை 'ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்' போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Background
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி விரைவில் விடுவிக்க வாய்ப்பு - திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார் - தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்
- செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - இன்று 17 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு
- சேலத்தில் 11ம் வகுப்பு மாணவி மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
- தவெக மாநாடு - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது
- திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு அரசியல் நாடகம் - விஜயபிரபாகரன் குற்றச்சாட்டு
- ஆர்ம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை - குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்
- மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் - பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிக்களுக்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு
- சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார் - உதயநிதியை மறைமுகமாக தாக்கிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
- மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை - இந்தியா கண்டனம்
- ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்
- இஸ்ரேல் படைகள் மீது முதல்முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
- ஈரானில் விஷ சாராயம் அருந்தி 26 பேர் உயிரிழப்பு
- காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்
- பெண்கள் டி-20 உலகக் கோப்பை - இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
- பெண்கள் டி-20 உலகக் கோப்பை - இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -