Breaking News LIVE OCT 3: 32,500 ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் -எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சுகுமாறன்Last Updated: 03 Oct 2024 04:35 PM
Background
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல – திருமாவளவன் பேச்சுதமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதில் தி.மு.க.வுக்கும் உடன்பாடு உண்டு – திருமாவளவன்...More
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல – திருமாவளவன் பேச்சுதமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதில் தி.மு.க.வுக்கும் உடன்பாடு உண்டு – திருமாவளவன் பேச்சுதி.மு.க.வின் வெற்றிக் கூட்டணியைப் பார்த்து எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல்; எதிரிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறாது – தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிஎன் வாழ்நாளில் ஒருநாள் கூட நான் மதுவைத் தொட்டதில்லை – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடிதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக மதுக்கடைகளை மூடும் கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு அமெரிக்க பாதுகாக்கும் – ஜோ பைடன் திட்டவட்டம்லெபனானைத் தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்புஈரானுக்கு எதிரான போரில் கடவுளின் உதவியால் நாங்கள் வெல்வோம் – இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுடென்மார்க் அருகே இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – கையெறி குண்டுகளை வீசிய 3 பேர் கைதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு; தடுப்பு வேலி அமைத்து ஏராளமான போலீசார் குவிப்புசெஞ்சி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாதிய வன்கொடுமை; பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாதி.மு.க. ஆட்சியில் பட்டியலின தலைவர் கிள்ளுக்கீரையாக நடத்தப்படுகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுசேலம் அருகே பேட்டரி மூலம் மிதிவண்டி இயக்கி அரசுப்பள்ளி மாணவர் சாதனைதாய்லாந்து, துபாய் நாடுகளில் இருந்து திருச்சிக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் – நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைதுஆற்காடு அருகே மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண்; மக்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு ஆர்.காந்தி எச்சரிக்கைவேலூரில் பாதாள சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு; சாலைகளில் வெள்ளம்போல ஓடிய கழிவுநீரால் மக்கள் பாதிப்பு
திருப்பத்தூர்: இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் பலர் அனுமதி.!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கிட்னியில் நோய் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் வேட்டப்பட்டு அருகே உள்ள சுடுகாட்டில் உடலை புதைக்க இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் உடலை தூக்கிச் சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கிருந்து நபர்கள் பட்டாசு வெடித்ததில் அருகே உள்ள புளிய மரத்தின் தேன் கூட்டின் மீது விழுந்து தேனீக்கள் நான்கு பக்கமும் சிதறி பறந்தன. அப்போது தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இறுதிச் சடங்கு கலந்து கொண்ட நபர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
”யாரையும் மதிக்க மாட்டார் சீமான்" - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார்
"நாம் தமிழர் கட்சியில் இருக்க பொறுப்பாளர்கள் எல்லாம் பணம், நேரம், உழைப்பு எல்லாத்தையும் கொடுக்குறாங்க, ஆனா யாரையும் மதிக்க மாட்டார் சீமான்" - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் பேட்டி
”யாரையும் மதிக்க மாட்டார் சீமான்" - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார்
"நாம் தமிழர் கட்சில இருக்க பொறுப்பாளர்கள் எல்லாம் பணம், நேரம், உழைப்பு எல்லாத்தையும் கொடுக்குறாங்க, ஆனா யாரையும் மதிக்க மாட்டார் சீமான்" - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் பேட்டி
வரும் 6-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
இந்திய விமானப் படை தினத்தை ஒட்டி வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
சுமார் 15 லட்சம் பேர் இந்த சாகச நிகழ்ச்சியை காண உள்ளனர். பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது போலீஸ். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.. நடிகர் நானி கடும் கண்டனம்
"எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தை பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே மிகவும் அருவருப்பாக இருக்கிறது” : சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.. நடிகர் நானி கடும் கண்டனம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்.. தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்..
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்! வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 3க்கு ஒரு படகும், மண்டலம் 14க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள படகுகள் மற்ற மண்டலங்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
TASMAC என்ற நிறுவனத்தை உருவாக்கியது யார்? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?": திருமாவளவன்
"கலைஞர் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறந்தது யார்? TASMAC என்ற நிறுவனத்தை உருவாக்கியது யார்? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?" உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்