Breaking News LIVE 3rd NOV: சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்- விஜய்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
உதயநிதி திமுகவிற்கு என்ன செய்துள்ளார்.
திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது.
திமுகவில் ஸ்டாலின் அரசன்; உதயநிதி இளவரசனாக இருக்கிறார். ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தல்
ஐ.டி நிறுவனங்களிலிருந்து அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்!
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (251) வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 8வது இடம் பிடித்தார் ஜடேஜா.
612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும், 433 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 2வது இடத்திலும் உள்ளனர்.
தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது
இக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகள் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
மாவட்டத் தலைவர்கள் தற்போது, அமைப்பு ரீதியாக அதிகாரம் வாய்ந்த பதிவியாக இருக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் எழும் விமர்சனங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
புதிய தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உறுப்பினர் சேர்க்கை என்ன ஆன என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜய் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் சரகம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
டி.பெருமாள் பாளையம் ஊராட்சி காரைக்காடு கிராமத்தில் வசிக்கும்
1) லட்சுமணன் - 45
2) ராணி - 37
3) லட்சுமணன் -55
4) வள்ளி - 45
ஆகியோர் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை நதியில் வெண்படலமாக மிதந்து வரும் நச்சு நுரை.
நதியின் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மோட்டார் படகு மற்றும் இயந்திரங்கள் வசதிகளுடன் நுரையை அகற்றும் பணி தீவிரம்
தவெக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
தவெக முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.
ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 14,000 கன அடியாக அதிகரிப்பு!
சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் புதிய அணியை தொடங்குவதாக பவன் கல்யாண் அறிவிப்பு
சென்னை: சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனத்தின் லாரியில் திடீரென பற்றிய தீ
லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதால் பரபரப்பு! விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2434 மில்லியன் கன அடியாக உள்ளது!
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 84 மில்லியன் கன அடியாக உள்ளது!
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 311 மில்லியன் கன அடியாக உள்ளது!
Background
- நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை - தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
- தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக திருச்சி, மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு.
- திருச்செந்தூர் சூரசம்கார நிகழ்வுக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் - - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
- சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனத்தின் லாரியில் திடீரென பற்றிய தீ - லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
- இடைத்தேர்தல் பரப்புரைக்கான்க இன்று வயநாடு வருகிறார் பிரியங்கா காந்தி - 5 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டம்
- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- காலிஷ்தானி தீவிரவாதி கொலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புபடுத்தி பேசிய கனடாவிற்கு இந்தியா கண்டனம் - விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதருக்கு சம்மன்
- சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு - கேரள அரசு
- ஸ்பெயினில் கனமழை - வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு
- ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாத சிறைதண்டனை அறிவிப்பு
- பொலிவியாவில் ராணுவ தளத்தை கைப்பற்றிய ஆயுத கும்பல்
- பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -