Breaking News LIVE: ஃபார்முலா 4 கார் பந்தயம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 31 Aug 2024 07:39 PM
ஃபார்முலா 4 கார் பந்தயம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இரவு 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது. 

தூத்துக்குடி: தனியார் வெடி கிடங்கில் திடீர் தீ விபத்தில் 2 பேர் பலி: தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  நாசரேத்- குறிப்பாண்குளம் பகுதியிலுள்  சிவசக்தி  தனியார் வெடி கிடங்கில் திடீர் தீ விபத்து  ஏற்பட்டு 2 பேர் பலி
சாத்தான்குளம் , ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் FORMULA 4 கார் பந்தயம் நடத்துவதற்கு முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல்

சென்னையில் FORMULA 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.


மாலை 5.15 மணியளவில் பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டு, 6 மணிக்கு சான்றிதழை அளிப்பார்கள் என எதிர்ப்பார்ப்பு.


FIA சான்றிதழ் கிடைத்த பிறகு, இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது

புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில், மீரட் - லக்னோ வழித்தடங்களுக்கான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

Breaking News LIVE: வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும் - பிரதமர் மோடி



Breaking News LIVE: புதிய வந்தே பாரத் ரயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி



Breaking News LIVE: 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் 

9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆகஸ்ட் மாத பருப்பு, பாமாயிலை செப்.5 வரை பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு

ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்க ஓபன் தொடர்; 3வது சுற்றிலே தோல்வி அடைந்து வெளியேறினார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் தொடரில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்

 


மைக்ரோசாஃப்ட் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். முதலீடுக்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். 

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடக்கம்

சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குகிறது. 

Background


  • தமிழ்நாட்டிற்கு புதியதாக 2 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

  • மதுரை – பெங்களூர். சென்னை – நாகர்கோயில் இடையே புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்

  • உலகத் தரமான கல்வியைப் பெற பி.எம்.ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – மத்திய அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

  • மத்திய அரசு எந்த கல்விக் கொள்கையை திணித்தாலும் ஏற்கத் தயாராக இல்லை – உயர்கல்வி அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

  • அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் ரூபாய் 900 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • சென்னையில் இன்று தொடங்குகிறது ஃபார்முலா 4 கார் பந்தயம் – இரவில் நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  • சென்னையில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி

  • திருச்சி என்.ஐ.டி.யில் மாணவியிடம் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது – மாணவிகள் போராட்டம் வாபஸ்

  • பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கிய எம்.எல்.ஏ. முகேஷ் பதவி விலக தொடர்ந்து போராட்டம்

  • தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு; தொழிலாளர் பரிதாபமாக உயிரிழப்பு

  • பிரேசிலில் எக்ஸ்( ட்விட்டர்) தளத்திற்கு தடை; உண்மை மக்களுக்கு தெரிவதை கண்டு ஆட்சியாளர்கள் அச்சம் – எலான் மஸ்க் ஆவேசம்

  • பாரலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் – அவனி லேகரா தங்கம் வென்று அசத்தல்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.