Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 30 Sep 2024 07:00 AM

Background


  • நாட்டு மக்களுக்கே துணையாக இருக்கப்போகிறார் உதயநிதி என முதலமைச்சர் வாழ்த்து - முதலமைச்சரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என உதயநிதி உறுதி

  • செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர் - ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

  • தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

  • ஹரியானாவில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 8 பேரை கட்ச்யை விட்டு நீக்கியது பாஜக

  • மேற்குவங்க வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு உதவவில்லை - முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

  • மார்க்ச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

  • டெல்லியில் காட்டாட்சி நடைபெறுகிறது  - அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

  • ஜம்மு காஷ்மீர் இறுதிகட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது - பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு 

  • நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது - காணாமல் போன 42 பேர தேடும் பணி தீவிரம்

  • காஸா, லெபனானை தொடர்ந்து ஏமன் மீதும் தாக்குதலை தொடர்ந்தது இஸ்ரேல் - ஹவுதி கிளர்ச்சி படையின் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கை

  • தென்னாப்ரிக்காவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு - 12 பெண்கள் உட்பட 17 பேர் பலி

  • இந்தியா - வங்கதேசம் மோதும் கான்பூர் டெஸ்ட் போட்டி - 4வது நாளில் மழை பொழிய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தகவல்

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது - மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கான 310 ரன்கள் என்ற இலக்கு 117 ஆக குறைப்பு

  • புதிய விதிகளை அறிவித்த ஐபிஎல் நிர்வாகம் - தோனி உள்ளிட்ட பல மூத்த வீரர்களுக்கும் சாதகமான சூழல்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.