Breaking News LIVE 30th OCT : அன்பு, அமைதி, செல்வம் நீடித்திருக்கட்டும்: தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து!
Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளியை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் “தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நீடித்து நிலைத்திருக்கட்டும். தீப ஒளித்திருநாளைப் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் “மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்துக் கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
"சென்னையில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் கட்டணம் ஏதுமின்றி பயன்பாட்டுக்குத் தொடரும்..!" -மேயர் பிரியா அறிவிப்பு
சென்னையில் பரவலாக கனமழை!
அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது!
கிருஷ்ணகிரி: தீபாவளியை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு.
சுங்கச்சாவடி அருகே ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை
Nishad Yusuf " 'கங்குவா’ படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப் காலமானார்.
இன்று பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Background
- ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடா? காங்கிரஸ் புகாரை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
- பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளால் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும் – காங்கிரசை எச்சரித்த தேர்தல் ஆணையம்
- தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமித்ஷா மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் – தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரசு இயந்திரங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
- முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை; பசும்பொன்னில் இன்று நேரில் மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நாளை தீபாவளி கொண்டாட்டம்; கிளாம்பாக்கத்தில் பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பதாக புகார்
- ஈரோட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை; தீபாவளி விற்பனை கடும் பாதிப்பு
- சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசுகள் விற்பனை மந்தம் –வியாபாரிகள் வேதனை
- புதுச்சேரியில் களைகட்டிய தீபாவளி விற்பனை; கூட்ட நெரிசலில் குற்றங்கள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு
- நாளை தீபாவளி; தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு
- புதுக்கோட்டையில் நகைக்கடையில் போலி ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்ததால் ரூபாய் 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையாதது குறித்து டெல்லி, மேற்குவங்கம் மீது பிரதமர் மோடி பரபரப்பு புகார்
- பொது சுகாதாரம் குறித்து தவறாக பேசி அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி – டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
- போக்குவுரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் பொய் அறிக்கை; பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
- உத்தரபிரதேசம் மாநிலத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் ஆலை கண்டுபிடிப்பு – 95 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
- புவிசார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
- நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்புகளைத் தொடங்க வேண்டாம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -