Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை

Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 02 Oct 2024 09:46 PM

Background

இஸ்ரேல் மீது நள்ளிரவில் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவி எண்களை அறிவித்தது இந்தியாமத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதலுக்கு...More

சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை

” சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள் “  என விசிக மது ஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். 


மேலும் பேசியதாவது 


மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் மையில் கல். எந்த மாநாட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.

 

 

 எங்கே மழை வந்துவிடுமோ என வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஆனால் இயற்கையும் நம் பக்கம் தான்.

 

திருமாவளவன் ஏன் திடீரென மதுவிலக்கு பற்றி பேசுகிறார் என சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

 

நாங்கள் சாதி, மத பெருமை பற்றி பேசி திரிபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்.

 

இந்த மாநாட்டில் புதிதாக காந்தி மற்றும் ராஜாஜியின் கட்அவுட் வைத்திருக்கிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை.

அரசியலமைப்பு சட்டம் 47 மது ஒழிப்பு தொடர்பாக கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என கூறிவிட்டார் என சில அரைவேக்காடுகள் ஊடகங்களில் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இந்த மாநாட்டை வைத்து அரசியல் பேச வேண்டாம், கூட்டணி கணக்கு போட வேண்டாம்.