Breaking News LIVE 2nd NOV: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 02 Nov 2024 09:12 AM
பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு பின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது

பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு பின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.


இதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி  நடைபெற உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது!

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது!


யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.


6 நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

Background


  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு – வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறை

  • தமிழ்நாட்டில் நேற்று மதுரை, திருப்பூரில் நேற்று பரவலாக கனமழைந வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு

  • தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் கொள்கைகள் குறித்து சீமான் கடும் விமர்சனம்

  • மத்திய பிரதேசம் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

  • ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை

  • காஷ்மீரில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் வனப்பகுதியில் பரவிய தீயால் கடும் சேதம்

  • கோவை கவுண்டம்பாளையத்தில் தேயிலை தூள் குடோனில் பயங்கர தீ விபத்து

  • அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்ட மோசடி நிறுவனங்களுக்கு ரூபாய் 566 கோடி அபராதம்

  • தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை, திருப்பூர். கோவை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

  • முத்திரைத் தாள் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

  • நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது காங்கிரஸ் – பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு

  • தேர்தல் ஆணையம் காங்கிரஸ் தலைவர்களை விமர்சிப்பதை ஏற்க முடியாது; இந்த நிலை நீடித்தால் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை – காங்கிரஸ் எச்சரிக்கை

  • ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முன்னாள் முதலமைச்சருடன் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

  • தொடர் மழையால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை – ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள்

  • மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாரம்பரிய போர் திருவிழா; பட்டாசுகளால் தாக்கிக் கொண்டதில் 30 பேர் காயம்

  • தீபாவளி கொண்டாட்டம்; மதுரையில் கடந்த 3 நாட்களில் 1690 டன் குப்பைகள் அகற்றம் – இரவு பகலாக குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

  • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான பேட்டிங்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.